கடுக்காயில் இருக்கும் இவ்வளவு மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்கிட்டா ஆச்சரியத்தில் நீங்களே வாயை பிளப்பீங்க...

 
Published : Nov 22, 2017, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
கடுக்காயில் இருக்கும் இவ்வளவு மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்கிட்டா ஆச்சரியத்தில் நீங்களே வாயை பிளப்பீங்க...

சுருக்கம்

You know the medicinal properties of the cucumber and you are surprised by yourself ...

கடுக்காய்:

மாலையில் அதேப்போல சாப்பிட அரை மணி நேரம் முன் கடுக்காயை அரை கடுக்காயை விதை இல்லாமல் வாயில் போட்டு வைத்தால் அது அவ்வளவு துவர்ப்பாக இருக்கும். இந்த கடுக்காயில்தான் அவ்வளவு மகிமையும் உள்ளது. 

இந்த கடுக்காயை உண்பதற்க்காகத்தான் இஞ்சியையும் சுக்கையும் சாப்பிடுகிறோம். மாதக் கணக்கில் குடலில் தங்கியுள்ள மலங்களையும் அகற்ற வல்லது இந்த கடுக்காய்.

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.'

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். 

எனவே, தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். 

ஜீரண சக்தி அதிகரிப்பு, இளமை பாதுகாப்பு, புத்தி சக்தி மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகியவை உள்ளன. 

கனமான தொடைப்பகுதியை சுருக்குதல், தோல்வியாதியை குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களை போக்குதல், சுவாசநோய்களை கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய் தருகிறது.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு 5 கிராம் கடுக்காய் தூள் எடுத்து சூடான நீரில் கலந்து பருகவேண்டும். 

இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாக ஜீரணமாகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும். 

இதனால் உடலின் முழு இயக்கமும் சீரடையும்.  நோய் அண்டாது. இளமையோடு நீண்ட நாள் வாழலாம். 

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க