சுண்டைக்காயை சாதாரணமா நினைக்காமல் அதில் எவ்வளவு மருத்துவம் குணம் இருக்குனு இதை படிங்க தெரியும்...

Asianet News Tamil  
Published : Nov 14, 2017, 01:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
சுண்டைக்காயை சாதாரணமா நினைக்காமல் அதில் எவ்வளவு மருத்துவம் குணம் இருக்குனு இதை படிங்க தெரியும்...

சுருக்கம்

You know how much medicine you have to do without thinking it is simple.

கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும். 

சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.

சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. 

பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம் பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று.

உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து, கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய பெரிய வேலைகளைச் செய்யக் கூடிய மாபெரும் மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது சின்னதான இந்த சுண்டைக்காய்.

இத்தனை சிறிய சுண்டைக்காயினுள் இவ்வளவு விஷயங்களா என மலைக்க வைக்கிறது.

** தேவையற்ற செல் பாதிப்புகள் நம் உடலில் ஏகப்பட்டவியாதிகளை வரவழைத்து விடும். நீரிழிவு, இதய நோய்கள் என எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி, இ போன்ற சத்துகளை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது இது. 

குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான தேவையான வைட்டமின் சியை அபரிமிதமாகக் கொண்டது சுண்டைக்காய். ஆரஞ்சு, கொய்யா, பப்பாளிக்கு இணையான வைட்டமின் சி இதில் உண்டு.

** ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. 

** சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது. இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது தெரியாது.

** சுண்டைக்காயை பச்சையாகவோ, வற்றலாகவோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன், காயங்களும் புண்களும் கூட ஆறும்.

** தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின் போன்ற பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அனைத்தும் இதில் உள்ளன. இதில் உள்ள ரிபோஃப்ளேவின்

** வாய் புண்களையும், சொத்தைப் பல் உருவாவ தையும் தடுக்கக் கூடியது.

** நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்கக்கூடியது சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும் நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காயில் உள்ள நல்ல குணங்கள் உதவக்கூடியவை.

** நம்மூர் மக்களுக்கு சுண்டைக்காய் வற்றலைத் தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது தெரியாது. ஆனால், சுண்டைக்காயை விதம் விதமாக சமைத்து உண்ணலாம். கத்தரிக்காயை என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ, அத்தனையையும் சுண்டைக்காயிலும் செய்யலாம்.

கேரட், பீட்ரூட் மாதிரி பிரமாதமான சுவை கொண்டதல்ல இது. சப்பென்றுதான் இருக்கும். ஆனால், அதை நாம் சமைக்கிற முறையின் மூலம் சுவை மிக்கதாக மாற்ற முடியும்.

** சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன் பாடு மிக அதிகம். அதன் சாரத்தை அவர்கள் பல மருந்துத் தயாரிப்புகளுக்கு உபயோகிக்கிறார்கள்.

** பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமாக சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது அதில் சேர்க்கப்படுகிற சுண்டைக்காய். 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake