ஆரோக்கியம் என்று நினைத்து நீங்கள் பின்பற்றும் தவறான வழிகள்…

 
Published : Jan 26, 2017, 02:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
ஆரோக்கியம் என்று நினைத்து நீங்கள் பின்பற்றும் தவறான வழிகள்…

சுருக்கம்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல எளிய வழிகள் உள்ளன. அந்த எளிமையான வழிகள் பற்றி பலருக்கும் தெரியாமல் இருப்பதால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை பின்பற்றி வருகின்றனர்.

உதாரணமாக, தூக்கத்தைப் போக்க ஆரோக்கியமற்ற காப்ஃபைன் நிறைந்த காபியைக் குடிப்போம். ஆனால் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் தூக்கம் கலைந்துவிடும் என்பது தெரியாது.

1.. ஒரு மாதம் தொடர்ந்து தினமும் 20-25 நிமிடம் ஓடினால் கட்டாயம், ஆரோக்கியமான வழியில் 1 கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்.

2.. தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து அன்றைய தினத்தை ஆரம்பித்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடனும், ஸ்மார்ட்டாகவும் செயல்பட முடியும்.

3.. புகைப்பிடிப்பவர்கள் தினமும் பால் டீக்கு பதிலாக, ப்ளாக் டீ குடித்து வந்தால், நுரையீரல் பாதிக்கப்படுவதை ஓரளவு தடுக்கலாம்.

4.. தூங்கும் முன் உடற்பயிற்சியை செய்தால், உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கலாம்.

5.. வீட்டு சாப்பாடு சாப்பிடுபவர்கள், ஹோட்டலில் அதிகம் சாப்பிடுபவர்களை விட சில வருடங்கள் அதிகமாக வாழ்கின்றனர். எனவே ஹோட்டலில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.

6.. காலையில் எழுந்ததும் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு காப்ஃபைன் நிறைந்த காபி அல்லது டீ குடிப்பதை விட, குளிர்ச்சியான தண்ணீரைக் குடிப்பது மிகவும் சிறந்தது.

7.. ஒருவர் ஒரு நாளைக்கு 9 மணிநேரத்திற்கு மேல் தூங்கினால், நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். எனவே தினமும் 7-8 மணிநேரத்திற்கு மேல் தூங்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க