செங்கொன்றையை இப்படியெல்லாம் பயன்படுத்தி இந்த பிரச்சனைகளை எல்லாம் குணமாக்கலாம்...

Asianet News Tamil  
Published : Jun 04, 2018, 02:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
செங்கொன்றையை இப்படியெல்லாம் பயன்படுத்தி இந்த பிரச்சனைகளை எல்லாம் குணமாக்கலாம்...

சுருக்கம்

You can use all this to cure all of these problems ...

செங்கொன்றை மருத்துவ குணங்கள்...

கோடைகாலத்தில் பூத்துக்குலுங்கும் மரம் செங்கொன்றை. சிறுநீர் தாரை தொற்றுக்களை போக்க கூடியதும், மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், தோல் நோய்களை சரிசெய்ய வல்லதுமான செங்கொன்றையின் மருத்துவ நன்மைகளை இங்கே காணலாம். 

பல்வேறு நன்மைகளை கொண்ட இதன் பாகங்கள் காசநோய், புற்றுநோய் தடுப்பு மருந்தாக விளங்குகிறது. 

வீக்கத்தை வற்றச்செய்ய கூடியது. வலியை தணிக்கும் தன்மை கொண்டது. உள், வெளி மருந்தாகி பயனாகிறது.

1.. செங்கொன்றை மலரை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்றுநோய்களை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: 

செங்கொன்றை மலர்கள், பனங்கற்கண்டு.

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் செங்கொன்றை பூவின் இதழ்களை 10 முதல் 15 வரை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் அழற்சி, தொற்றுநோய் குணமாகும். சிறுநீர் தாரையில் ஏற்படும் அடைப்பு, வலி சரியாகும். சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரகம் பழுதுபடாமல் பாதுகாக்கும்.

மிகவும் அழகாக காட்சி தரும் செங்கொன்றை மரத்தின் மலர்கள் சிவந்த வண்ணத்தில் மரம் முழுக்க இருக்கும். பூக்களை விட இலைகள் மிகவும் சிறியது. செங்கொன்றை பூக்களை பயன்படுத்தி பூஞ்சை காளான்களால் தோலில் ஏற்படும் தொற்று,

2.. சேற்றுப் புண்களை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: 

செங்கொன்றை பூக்கள், தேங்காய் எண்ணெய்.

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரைத்து வைத்திருக்கும் செங்கொன்றை பூக்களின் பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி சேற்று புண்கள் மீது பூசிவர புண்கள் ஆறும். 

பூஞ்சைகாளான்களால் தோலில் ஏற்படும் படை, சொரி, சிரங்கு, சொரியாசிஸ் ஆகியவை சரியாகும். தோலுக்கு பழைய ஆரோக்கியத்தை கொடுக்கும். விரல் இடுக்கில் ஏற்படும் அரிப்பை போக்கும்.

3.. செங்கொன்றை இலைகளை பயன்படுத்தி தசை, மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: 

செங்கொன்றை இலைகள், விளக்கெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் ஊற்றவும். இதில் செங்கொன்றை இலைகளை போட்டு வதக்கவும்.

இதை இளஞ்சூட்டுடன் கட்டி வைத்தால் மூட்டுவலி, வீக்கம் குறையும். செங்கொன்றை அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. இதன் இலைகள், பூக்கள் மருந்தாகிறது. எளிதில் கிடைக்க கூடிய செங்கொன்றையை பயன்படுத்தி நாம் நலம்பெறலாம்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake