காளானில் இருக்கும் சத்துகள் இவ்வளவு ஆரோக்கியத்தை நமக்கு தருகிறது...

 
Published : Jun 04, 2018, 02:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
காளானில் இருக்கும் சத்துகள் இவ்வளவு ஆரோக்கியத்தை நமக்கு தருகிறது...

சுருக்கம்

The nutrients in the mushroom gives us so much health ...

** காளானில் குறைந்த அளவு சோடியமும் மற்றும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும், இதில் உள்ள Beta Glucan பாலிசாக்கரைடு பித்த உப்புகளுடன் பிணைந்து ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். எனவே, காளான் உண்பது இதய நலத்துக்கு மிகவும் நல்லது.

** காளானில் இருக்கும் Beta – Glucan என்னும் பாலிசாக்கரைடு பல வகை நோய்களைத் தடுக்கவும், சிறந்த ஆரோக்கியத்தையும் தரவும் வல்லது.

** காளானில் இருக்கும் Lentysine, Eeritadenin வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதனால் ரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு சீராகவும் செயல்படுகிறது. 

** புரதம் அதிகம் என்பதைப் போலவே பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவும் காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி.யும், சோடியம் 9 மி.கி.யும் உள்ளன. எனவே, இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளானை சொல்லலாம்.

** காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, காளானை நன்றாக சமைத்தபிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

** அதேபோல, காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டது என்பதால் பாலூட்டும் தாய்மார்கள் காளான் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

** புற்றுநோய் செல்களை அதிகரிக்கவிடாமல் தடுக்கும் தன்மை படைத்தது காளான். சில வகை காளான்கள் கீமோ தெரபி சிகிச்சையில் ஏற்படும் பக்கவிளைவுகளையும் குறைக்கும் திறன் கொண்டவை.

** காளானில் உள்ள புரதம் உடலுக்குத் தேவையான எல்லா அமினோ அமிலங்களையும் உள்ளடக்கியது. எனவே, காளானில் உள்ள புரதம் முழுமைத் தன்மை கொண்டது என்று சொல்லலாம்.

** நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் வாய்ந்தது காளான். மேலும், நோய் எதிர்ப்பு குறைபாடுகள் (Autoimmune disorder) உள்ளவர்களுக்கும் நோய் எதிர்ப்பு செல்களைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும்.

** ஆன்டி ஆச்சிடென்டுகள் அதிக அளவில் காணப்படுவதால் நோய் எதிர்ப்பு மட்டுமல்லாமல் புற்றுநோயையும் தடுக்கவல்லது காளான்.

** காளான் உண்பதால் ஆஸ்துமா போன்ற சுவாச அமைப்பு குறைபாடுகளை தடுக்க முடியும். காயங்களை எளிதில் ஆற்றுவதற்கும் காளான் உதவும். 

** நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கவும் காளான் நல்ல சாய்ஸ்.

PREV
click me!

Recommended Stories

Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க
Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்