இந்த மூன்று முக்கிய பொருட்களை கொண்டு தேமலை குணப்படுத்தலாம்...

 
Published : Jun 02, 2018, 02:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
இந்த மூன்று முக்கிய பொருட்களை கொண்டு தேமலை குணப்படுத்தலாம்...

சுருக்கம்

Here are the three main ingredients that can cure the teal and the way they are used.

தேமல் பிரச்சனைக்கு வேப்பிலை, மாதுளை, கல்யாண முருங்கை ஆகியவை மருந்தாகிறது. 

1.. வேப்பிலையை பயன்படுத்தி தேமலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: 

வேப்பிலை, மஞ்சள் பொடி, கடுக்காய் பொடி. செய்முறை: வேப்பிலையை பசையாக அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி, கடுக்காய்பொடி சேர்க்கவும்.

இவைகளை நன்றாக கலந்து தேமல் இருக்கும் இடத்தில் பூசிவைத்து கழுவிவர தேமல் குணமாகும். எந்தவகையான தேமலாக இருந்தாலும் அதை ஆரம்ப நிலையில் தடுப்பது நல்லது. வேப்பிலை அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. 

அம்மை கண்டபோது, தொற்றுநோய்கள் வந்தபோது இல்லத்தின் முற்றத்தில் வேப்பிலையை வைப்பது வழக்கம். இது தொற்றுக் கிருமிகளை தடுக்க கூடியது.

2.. மாதுளையை பயன்படுத்தி தேமலுக்கான மருந்து தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: 

மாதுளை, பூண்டு, கடுக்காய் பொடி. செய்முறை: 2 ஸ்பூன் மாதுளை சாறு, கால் ஸ்பூன் பூண்டு பசை, கால் ஸ்பூன் கடுக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து தேமல் இருக்கும் இடத்தில் அழுத்தி தேய்த்து சிறிது நேரத்துக்கு பின் கழுவிவர தேமல் வெகுவிரைவில் மறையும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பூண்டில் நோய் கிருமிகளை அகற்றும் வேதிப்பொருள் உள்ளது. மாதுளை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது. தோலுக்கு மென்மை கொடுக்க கூடியது. 

3.. கல்யாண முருங்கையை பயன்படுத்தி தேமலுக்கான மருந்து தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: 

கல்யாண முருங்கை, உப்பு, வெங்காயம். செய்முறை: கல்யாண முருங்கை இலை பசை, உப்பு, வெங்காய சாறு ஆகியவற்றை கலந்து தேமல் உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர வெகுவிரைவில் தேமல் மறையும்.

மருத்துவ குணங்களை கொண்ட கல்யாண முருங்கையில் முட்கள் இருக்கும். இது மூட்டு வலியை குணப்படுத்தும். சளியை போக்கும். வயிற்று கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது. 

கல்யாண முருங்கை சிவந்த நிறமுடைய பெரிய பூக்களை கொண்டது. கல்யாண முருங்கையை அரிசி மாவில் சேர்த்து அரைத்து தோசையாகவோ அல்லது அடையாகவோ சாப்பிடும்போது ரத்த ஓட்டம் சீராகும். 

சளி பிரச்னையை தீர்க்கும். வலியை போக்கும். பூஞ்சை காளான்களை அழிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது.

வெங்காயம், மாதுளை, பூண்டு, வேப்பிலை ஆகியவை தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. இவைகளை பயன்படுத்துவதன் மூலம் தேமலை குணப்படுத்தலாம். 

PREV
click me!

Recommended Stories

Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க