உடல் எடையை குறைக்க எலுமிச்சம் பழம் நன்றாக உதவுமாம். எப்படின்னு இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க...

 
Published : Jun 02, 2018, 02:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
உடல் எடையை குறைக்க எலுமிச்சம் பழம் நன்றாக உதவுமாம். எப்படின்னு இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க...

சுருக்கம்

Lemon juice helps to reduce body weight. Know how to read it ...

எலுமிச்சம் பழ சாற்றில் 5 சதவீதம் அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்பு சுவை தருகிறது. இதன், தனித்துவமே இதுதான். 

100 கிராம் எலுமிச்சை பழத்தில், நீர்ச்சத்து – 50 கிராம், கொழுப்பு – 1.0 கிராம், புரதம் – 1.4 கிராம், மாவுப்பொருள் – 11.0 கிராம், தாதுப்பொருள் – 0.8 கிராம், நார்ச்சத்து – 1.2 கிராம், சுண்ணாம்பு சத்து – 0.80 மி.கி., 

பாஸ்பரஸ் – 0.20 மி.கி., இரும்பு சத்து – 0.4 மி.கி., கரோட்டின் – 12.மி.கி., தையாமின் – 0.2 மி.கி., நியாசின் – 0.1 மி.கி., வைட்டமின் ஏ – 1.8 மி.கி., வைட்டமின் பி – 1.5 மி.கி., வைட்டமின் சி – 63.0 மி.கி., ஆகியவை உள்ளது.

** தொண்டை புண் ஆறும்: 

இதிலுள்ள அதிகமான வைட்டமின் ‘’சி’’ சத்தும், ரிபோப்ளோவினும் புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க, தொண்டை புண், வாய்ப்புண் ஆறும். எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் மறையும்.

** கல்லீரலுக்கு சிறந்தது: 

எலுமிச்சை சாறுடன், இஞ்சி சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும். எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும்போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும். கல்லீரலை பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை. 

** கற்களைக் கரைக்கும் 

பித்தநீர் சரியான அனவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது.

** முகச்சுருக்கம் நீங்கும்: 

எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி வர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறைகின்றன.

** எடை குறையும்: 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேனுடன் பருகி வர உடல் எடை குறையும். 

** இதய குறைபாடுகளை நீக்கும்:

பொட்டாசியம் அதிகமானளவில் இருப்பதால் இதய குறைபாடுகளை நீக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வயிற்று பிரட்டல் போன்ற உபாதை நீங்கும்.
 

PREV
click me!

Recommended Stories

Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க