கொழுப்புகளை கரைத்து இரத்தக் குழாயை சுத்தமாக்க இதை சாப்பிட்டு பாருங்களேன்...

 
Published : Jun 02, 2018, 01:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
கொழுப்புகளை கரைத்து இரத்தக் குழாயை சுத்தமாக்க இதை சாப்பிட்டு பாருங்களேன்...

சுருக்கம்

Let eat this to dissolve fats and clean the blood vessel ...

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இரத்தக் குழாயில் படிந்திருக்கும் கொழுப்பு கரைக்கப்பட்டு, இரத்தக் குழாய் சுத்தமாகும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரும் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவைக் குறைக்கும். இதற்கு ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குளோராஜெனிக் அமிலம், கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, இதய நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும்

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, கெட்ட கொழுப்புக்களின் அளவை சீரான அளவில் குறைக்கும்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி சாறு – 1 கப்

ஆப்பிள் சீடர் வினிகர் – 1 கப்

வெங்காய சாறு – 1 கப்

எலுமிச்சை சாறு – 1 கப்

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சாறுகளையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் குறைவான தீயில் வைத்து, 30 நிமிடம் கிளறி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதில் 3 கப் தேன் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.

இந்த மருந்தை தினமும் காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவிவிட்டு, வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

இப்படி கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் உட்கொண்டு வந்தால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இரத்தக் குழாயில் உள்ள கொழுப்பு படிந்திருப்பது கரைக்கப்பட்டு, இரத்தக் குழாய் சுத்தமாகும்.

PREV
click me!

Recommended Stories

Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க