
சில பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்தல் இருக்கும். அவர்கள் கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தி ரிசல்ட் கிடைக்காமல் நொந்து இருப்பர். அவர்களுக்கான தீர்வு தான் இங்கே நாம் பார்க்கப்போவது:
1.. நெல்லிக்கனிகளை அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து தலையில் ஊறும்படி தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிர்தல் நின்றுவிடும்.
2.. தலையில் முடி உதிர்ந்து சொட்டையாதலுக்கு வெள்ளைப்பூண்டுப் பற்களைத் தேனில் ஊரவைத்து சொட்டை விழுந்த இடத்தில் பத்து நிமிடங்கள் தேய்த்து வரவேண்டும். அவ்வாறு தொடர்ந்து இருபது நாட்கள் செய்ய முடி வளரும்.
3.. தலை முடி வளர, எலுமிச்சம் பழவிதைகளுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நீர் விட்டு அரைத்து முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து வந்தால் சிறிது நாளில் முடி வளரும்.
4.. உடல் சூட்டினால் சிலருக்கு முடி கொட்டி விடுவதுண்டு. அதற்கு வெந்தயத்தை நீர் விட்டு அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தப்பின் குளிக்கவேண்டும். உஷ்ணம் கட்டுப்படுவதோடு, முடி கொட்டுவதும் நிற்கும்.