உங்களுக்குத் தெரியுமா? கேரட் சாப்பிட்டால் கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை உங்களை நெருங்கவே நெருங்காது.

 
Published : May 15, 2017, 12:48 PM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
உங்களுக்குத் தெரியுமா? கேரட் சாப்பிட்டால் கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை உங்களை நெருங்கவே நெருங்காது.

சுருக்கம்

Do you know If you eat carrots fatigue and impotence do not get close to you.

கேரட்டில் ஒரு அதிசயம் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும்.

கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது.

கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது.

வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது.

கேரட்டில் உள்ள சத்துக்கள்:

** சக்தி 41 கலோரிகள்

** கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்

** சர்க்கரை 5 கிராம்

** நார்சத்து 3 கிராம்

** கொழுப்புச் சத்து 0.2 கிராம்

** புரோட்டின் 1 கிராம்

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது.

கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும்போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.

இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம். குடல் புண்கள் வராமல் தடுக்கலாம்.

கேரட் வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.

கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.

பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

 

PREV
click me!

Recommended Stories

Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது
Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க