வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? அப்ப டீ பயன்படுத்தலாமே!...

 
Published : Jun 09, 2017, 01:09 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? அப்ப டீ பயன்படுத்தலாமே!...

சுருக்கம்

Will the skin change the color of the skin You can use that tea

வெயில் காலம் ஆரம்பிக்கப் போவதால், வெயிலானது சருமத்தில் அதிகமாகப் படும். இதனால் இதுவரை அழகாக பராமரித்து வந்த சருமமானது, வெயிலில் சுற்றும் போது நிறம் மாறிவிடும்.

இவ்வாறு சருமத்தின் நிறம் மாறுவதற்கு பெரும் காரணம், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் சரும செல்களை பாதிப்பதே ஆகும்.

மேலும் இத்தகைய நிலையானது நீடித்தால், சரும புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.

எனவே இத்தகைய நிலையை மாற்றுவதற்கு முறையான பராமரிப்பானது கோடைகாலத்தில் அதிகம் தேவைப்படும்.

இதற்கு ஒரே வழி இயற்கை முறை. அதிலும் டீயை வைத்து எளிதில் சரிசெய்யலாம். ஏனெனில் டீயில் டேனிக் ஆசிட் இருப்பதால், அவை சரும செல்களை மென்மையாக்கி, சரும நிறத்தை மாறாமல் தடுக்கும். சரி, இப்போது டீயை வைத்து எப்படி பழுப்பு நிற சருமத்தை சரிசெய்வது என்று பார்ப்போமா!!!

1.. டீ பையை சூடான நீரில் போட்டு ஊற வைத்து, பின் அதனை அறைவெப்ப நிலையில் குளிர வைத்து, பின் ஒரு துணியை அதில் நனைத்து, சருமத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பிறகு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் பழுப்பு நிற சருமமானது போய்விடும்.

2.. டீ தயாரிக்கும் போது, டீ பையை பயன்படுத்தினால், பயன்படுத்தியப் பின் அதனை தூக்கிப் போடாமல், குளிர வைத்து, பின் அந்த பையை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தேய்த்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

3.. டீ குளியல் கூட எடுக்கலாம். அதற்கு சிறிது டீ பையை குளிக்கும் நீரில் போட்டு, 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை எடுத்துவிட்டு, பின்னர் குளிக்க வேண்டும். இதனாலும் பழுப்பு நிற சருமத்தைப் போக்கலாம்.

4.. ப்ளாக் டீயும் பழுப்ப நிற சருமத்தைப் போக்குவதில் மிகவும் சிறந்தது. அதிலும் சாமந்தி பூ டீ (chamomile tea), சூரியக் கதிர்களின் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைத்து, சருமத்தை நிறம் மாறாமல் வைக்கும்.

5.. டீ பையை பாலில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் சரும மாற்றத்தை தடுக்கலாம். இதுவும் ஒரு வகையான பழுப்பு நிற சருமத்தைப் போக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க