குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு காது வலி வருவது ஏன்? தீர்வு உண்டா?

By Kalai SelviFirst Published Dec 2, 2023, 2:42 PM IST
Highlights

குளிர் காலநிலையில் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படுவது வழக்கம். இதனுடன் காது வலியும் குழந்தைகளை பாதிக்கிறது.

பொதுவாகவே, நம் காதுகளுக்குள் உள்ள நரம்புகள் மிகவும் மிருதுவானது மற்றும் நுண்ணியமானது. குளிக்கலாம் வந்தாலே நம் உடல் உறுப்பில் முதலில் பாதிக்கப்பட்டுவது காது தான். எப்படியெனில், காற்றும் குளிரும் அதிகமானால் காது தான் முதலில் வலிக்கும். பின் பற்கள். 

மேலும் நம் காது நரம்புகள் கொஞ்சம் பாதிக்கப்பட்டாலும் வலியை அதிகமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், காதுக்குள் ஏதாவது பாக்டீரியா தொற்று அல்லது  காயம் இருந்தால் குளிர் காலத்தில் ரத்த ஓட்டம் சிறிது குறைவதால் கூட வலி அதிகமாக இருக்கும். அச்சமயத்தில், காது வலியுடன் பல்வலியும் சேர்ந்தே வரும்.

Latest Videos

இந்த காது வலியானது பெரியவர்களை விட குழந்தைகளை தான் அதிகம் தாக்கும். ஏனெனில், இவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு இன்னும் பெரியவர்களைப் போல வளரவில்லை. சில சமயங்களில் குழந்தைகளுக்கு ஜலதோசம், சளி, தும்மல் இருக்கும் சமயத்தில் கூட அவர்களுக்கு காது வலி உண்டாகும். மேலும் ஜலதோசம் , சளி தும்மல் இருக்கும்போது அந்த வைரஸ் அல்லது பாக்டீரியாக்களால் காதுக்கு நடுவில் தொற்று உண்டாகி வலியை ஏற்படுத்தும். இப்படி குளிர்காலத்தில் குழந்தைகளை வாட்டி வதைக்கும் இந்த காது வலியில் இருந்து பாதுகாக்க சில வழிமுறைகளை பின்பற்றினால் மட்டும் போதும். அவை..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குளிர்காலத்தில் குழந்தைகளை காது வழியில் இருந்து பாதுகாக்கும் முறைகள்:

  • குழந்தைகளின் காதுகளை குளிர்காலங்களில் மூடி வைக்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கு காது இலேசாக வலி இருக்கும்போது தீக்குச்சி, முடிபின், பஞ்சுகளை வைத்து குடைவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் அவை வலியை இன்னும் அதிகமாக்கும்.
  • குழந்தைக்கு காது வலி இருக்கும் போது அடிக்கடி, சூடான நீரில் டவலை நனைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
  • குழந்தைகளை குளிப்பாட்டும் போது காதுகளுக்குள் நீர் புகாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், நீர் காதுகளுக்குள் சென்றாலும் வலியை உண்டாக்கும். அவர்களை குளிப்பாட்டிய பின் சீக்கிரம் நன்கு துடைக்க வேண்டும்.
  • அதுபோல் குழந்தைகள் இரவில் தூங்க  வைக்கும் போது மாஃப்ளர் அணிவது நல்லது.
click me!