முகத்திற்கு சோப் அடிக்கடி பயன்படுத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

First Published Mar 20, 2018, 1:21 PM IST
Highlights
What kind of effects do you see if the soap is often used on the face?


முகத்தை சுத்தம் செய்ய பலரும் பயன்படுத்தும் பொருள் சோப்பு. ஆனால் இந்த சோப்பை அளவுக்கு அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. இதற்கு சோப்பில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் சரும செல்களை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கும். 

ஒரு நாளைக்கு பலமுறை பயன்படுத்தினால் இந்த விளைவுகள் ஏற்படும்...

சரும செல்கள் பாதிப்பு

சோப்புக்களில் உள்ள மோசமான கெமிக்கல்கள், சரும செல்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சரும செல்கள் பாதிப்பிற்குள்ளானால், அதனால் முக அழகு பாதிப்பிற்குள்ளாகும். ஆகவே சோப்பை அதிகமாக முகத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்.

சரும வறட்சி

சோப்புக்களை அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள நேச்சுரல் எண்ணெய் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் மிகுந்த வறட்சிக்குள்ளாகும்.

கொழுப்பு அமிலங்கள் நீங்கும்

சோப்புக்கள் சருமத்திற்கு பாதுகாப்பளிக்கும் கொழுப்பு அமிலங்களை முழுமையாக வெளியேற்றி, அதனால் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மையைக் குறைத்துவிடும். இதனால் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

முகப்பரு

சோப்புக்கள் சருமத்தில் இருக்கும் கொழுப்பு அமிலங்களை வெளியேற்றி, பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளின் தாக்கத்தை அதிகரித்து, அதன் காரணமாக முகப்பரு அடிக்கடி வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

வைட்டமின்கள் வெளியேறும்

சோப்புக்களை அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் வெளியேற்றப்பட்டு, அதனால் சரும பொலிவும், ஆரோக்கியமும் குறைந்துவிடும்.

pH அளவு பாதிக்கப்படும்

சோப்புக்களில் உள்ள கெமிக்கல்கள், சருமத்தின் ஈரப்பசையைக் குறைப்பதோடு, சருமத்தின் pH அளவை பாதித்து, அதனால் பல பிரச்சனைகள் வர வழிவகுக்கும்.

சருமத்துளைகள் அடைக்கப்படும்

நிறைய சோப்புக்களில் ஃபேட்டி அமிலங்கள் அதிகமாக உள்ளது. இவை சருமத்துளைகளில் தேங்கி அடைப்பை ஏற்படுத்தி, அதனால் முகப்பரு பிரச்சனையை மேன்மேலும் அதிகரிக்கும்.


 

click me!