இந்த இயற்கை பானத்தை தினமும் குடித்தால் இதய அடைப்பு நீங்கும்..

Asianet News Tamil  
Published : Mar 20, 2018, 01:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
இந்த இயற்கை பானத்தை தினமும் குடித்தால் இதய அடைப்பு நீங்கும்..

சுருக்கம்

If you drink this natural drink every day

இன்றைய காலத்தில் 30 வயதுகளில் இதய பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். 

மது, புகை, மோசமான உணவுப் பழக்கம் என தீயவற்றை தேடிக் கொள்வதன் விளைவு இன்று பல நோய்கள். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் கொலஸ்ட்ரால்தான். 

வெறும் உணவு மட்டும் கொலஸ்ட்ராலை அதிகரிக்காது. மது புகை, மன அழுத்தம் ஆகியவைகளும் காரணமாகும்.

இந்த இயற்கை பானத்தை தினமும் காலையில் குடித்தால் இதய அடைப்பு நீங்கிவிடும். கொழுப்பு கரையும், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

தேவையானவை:

எலுமிச்சை – 1 கிலோ

சமையல் சோடா – 1 பாக்கெட்

பார்ஸ்லி கீரை – 6 கட்டு,

நீர் – 12 டம்ளர்.

செய்முறை:

முதலில் எலுமிச்சையை நன்றாக கழுவி, இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். மேலே கொடுக்கப்பட்ட அளவில் நீரை வெதுவெதுப்பாக எடுத்து அதில் சமையல் சோடா மற்றும் எலுமிச்சையை போட்டு 1 மணி நேரம் மூடி அப்படியே ஊற விடவும்.

அதன் பின் பார்ஸ்லி கீரையை பொடியாக நறுக்கி அந்த நீரில் போட்டு 2-3 மணி நேரம் வரை வேக விடுங்கள். அடுப்பை குறைவான தீயிலேயே வைத்து வேக விடவும். அதன் பின்னர் ஆற வைத்து வடிகட்டி மூடியுள்ள பாத்திரத்தில் எடுத்து குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும். 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4 ஸ்பூன் எடுத்து குடியுங்கள். 20 நாளைக்கு இந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் பரிசோதனை செய்து பாருங்கள். கண்டிப்பாக நீங்களே மாற்றங்கள் காண்பீர்கள்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake