சத்துகள் எதில் அதிகம் இருக்கிறது? பழத்திலா? பழச்சாற்றிலா?

First Published Apr 12, 2018, 12:27 PM IST
Highlights
What is nutrient? fruits or fruit juices?


பழரசத்தை அருந்திவிட்டு நாளை ஆரம்பிப்பவர்களுக்கு ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படும். மேலும் எடை குறைப்பிற்கான திட்டத்தையும் அது பாதித்துவிடும். சில மக்கள் பழரசங்கள்; செயற்கை குளிர்பானங்களைப் போல,கெடுதலானவை என கருதுகின்றனர்.

பழங்கள் மற்றும் பழச்சாறுகள் இரண்டும் ஒரே மாதிரியானவை. முந்தையதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருள் தான் அடுத்தது. ஆனால் கவனித்துப் பார்த்தால் இரண்டிலும் ஒரு வேறுபாடு உண்டு. பழங்கள் மற்றும் பழச்சாறுகளில் உள்ள நார்ச்சத்து அளவே அதில் முக்கியமானது.

பழச்சாறுகள் மிக விரைவில் உட்கிரகிக்கப்படும்

ஆரோக்கியமான உணவு முறை மற்றும் அதிக அளவிலான எடை போன்றவற்றிற்கான ஆராய்ச்சியில், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள மனித சத்துக்கள் தொடர்பான ஆராய்ச்சி யூனிட்டின் முடிவில், பழச்சாறுகளைக் காட்டிலும் சத்தான உணவுகளே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழச்சாறுகள் எடைக் குறைப்பிற்கான திட்டங்களை சீர்குலைத்துவிடும்

நீங்கள் ஒரு ஆரஞ்சு பழத்தையும், ஒரு டம்ளர் ஆரஞ்சு பழச்சாறையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு டம்ளர் பழச்சாறில் நான்கு ஆரஞ்சு பழங்கள் அடங்கி இருக்கும். 

இப்போது உங்களுக்கு ஒரு ஆரஞ்சு பழம் பசியை குறைக்குமா? அல்லது ஆரஞ்சு பழச்சாறு உங்களுக்கு பசியைக் குறைக்குமா? நீங்கள் நன்கு புரிந்து கொள்ளுபவராக இருந்தால் முதலாமாவதையே கூறுவீர்கள். 

ஏனெனில், பழம் உண்பதே பழச்சாறு குடிப்பதை விட எளிதில் வயிற்றை நிரப்பும். மேலும் பழச்சாற்றில் நான்கு ஆரஞ்சுகளோடு, அதிக அளவு சர்க்கரையும் இருக்கும்

பழச்சாறுகளில் உள்ள அதிக அளவிலான சர்க்கரை

சில மில்லி அளவிலான பழச்சாற்றில், குறைந்தது இரண்டு ஸ்பூன் அளவிலான சர்க்கரை இருக்கும். உங்கள் உடலில் சேரும் அதிக அளவிலான சர்க்கரை, உங்கள் உடலில் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும். ஆற்றல் திடீரென எரிக்கப்படுவதால், உங்களுக்கு அயர்வு, களைப்பு, எரிச்சல் மற்றும் ஈடுபாடின்மை போன்றவை ஏற்படும்.

பழச்சாற்றை முழுவதும் தடை செய்ய வேண்டுமா?

பழச்சாறுகளை எடுத்துக் கொண்டாலே பிரச்சனை அல்ல. நீங்கள் எடுத்துக் கொள்ளும் அளவைப் பொறுத்தே உங்களுக்கு ஏற்ற விளைவுகள் ஏற்படும். நார்ச்சத்து மற்றும் பல நல்ல சத்துக்கள் அடங்கி உள்ள பழங்களை நறுக்கி தயாரிக்கப்படும் பழச்சாற்றில், உள்ள செறிவு மிக்க சர்க்கரையானது, நார்ச்சத்தையும், மற்ற சத்துக்களையும் அப்படியே தேக்கி வைத்துக் கொள்ளும். இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் துணை புரியும்.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை எடுத்துக் கொள்பவரா?

உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. அவற்றில் பெரும்பாலும் குறைந்த சதவீதமே உண்மையான பழம் அடங்கி இருக்கும். மிகவும் சரியான சொல்வதானால், அந்த பழச்சாறுகளில் அந்த பழத்திற்கான சுவையே புலப்படுவதில்லை. 

சிலர் அதிக அளவிலான கலோரியை, ஒரு டம்ளர் பழச்சாற்றில் எளிதாக பெற்று விடலாம் என கருதுகின்றனர். ஆனால்,நீங்கள் அதிக அளவில் பெறுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் சத்துக்கள் உங்களை அடைவதில்லை. 

பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் பழச்சாறுகளில், குறைந்த அளவிலான கொழுப்பு இருக்கும் என உங்களை கவரும் வண்ணம் பாக்கெட்டுகளில் போடப்பட்டிருக்கும். அது நம்மை ஏமாற்றுவதற்கான வேலை என புரிந்து கொள்ள வேண்டும்.

 

click me!