உடலில் சிவப்பு நிற புள்ளிகள் ஏற்பட இதுதான் காரணம்? தெரிஞ்சுக்குங்க உதவும்...

First Published Apr 12, 2018, 12:23 PM IST
Highlights
This is the reason for red spots on the body? Help you know ...


உடலில் உருவாகும் சிவப்பு புள்ளிகள்

நம் உடலுக்குள் என்ன மாற்றம் உண்டானாலும், அதை வெளிப்புற உடலில் அறிகுறியாக வெளிப்படுத்த நமது உடல் எப்போதும் தவறுவதில்லை. ஆனால், நம்மில் பலரும் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டு கொள்வதில்லை. 

சிறிதாக இருப்பதை நாம் எப்போதும் மதிப்பதில்லை. ஆனால், அதுவே பூதாகரமாக வளர்ந்து நிற்க்கும் போது அஞ்சி நடுங்கி ஓடுவோம். 

இந்த வகையில் உடலில் மச்சம் அல்லது மரு போல தோன்றும் சிவப்பு புள்ளிகள் ஏன் தோன்றுகின்றன. 

சருமத்தில் தென்படும் சில குறிகள் சாதாரணமான மச்சம் அல்ல. முக்கியமாக சிவப்பு நிறத்தில் தோன்றுபவை. பொதுவாக 40 – 45 வயது மிக்கவர்களிடம் தான் இந்த சிவப்பு புள்ளிகள் தென்படுகின்றன. சிலருக்கு இது இளம் வயதில் (அ) குழந்தை பருவத்தில் கூட தென்படலாம்.

இதை பொதுவாக நிறத்தை வைத்து ஆங்கிலத்தில் ரூபி பாயின்ட் என அழைக்கின்றனர்.

இரத்த நாளங்களின் சிஸ்டத்தில் ஏற்படும் செயற்திறன் குறைபாடு காரணத்தால் இந்த சிவப்பு புள்ளிகள் சிறிய இரத்த நுண் குழாய் நீட்டிப்பு ஆகும்.

பொதுவாக இதுப்போன்ற சிவப்பு புள்ளிகள் தோள்பட்டை மற்றும் மார்பு பகுதிகளில் தான் அதிகம் தோன்றும்.

click me!