எந்தெந்த பிரச்சனைக்கு எந்தெந்த கீரைகளை சாப்பிட்டால் நல்லது…

 
Published : Jun 15, 2017, 01:34 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
எந்தெந்த பிரச்சனைக்கு எந்தெந்த கீரைகளை சாப்பிட்டால் நல்லது…

சுருக்கம்

What are the goodies to eat for any problem?

அகத்திக்கீரைல வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்குது. சாம்பார், கூட்டு, பொரியல் செஞ்சி இந்த கீரையை சாப்பிட்டு வந்தீங்கனா எலும்பு நல்லாவே வளரும்.

வயசான காலத்துல சிலபேருக்கு இடுப்பு எலும்பு பலமில்லாம முன்பக்கமோ, பின்பக்கமோ வளைஞ்சி நடக்கவே கஷ்டப்படுவாங்க. இந்த மாதிரி பிரச்சினைகளை தவிர்க்கவும்னா அடிக்கடி அகத்திக்கீரை சாப்பிடவும்.

இது வாயுவை உண்டாக்குற கீரையா இருந்தாக்கூட அதோட பெருங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து சமைச்சா வாயு விலகிப்போயிரும். அகத்திக்கீரையில அவ்வளவு விஷயம் இருக்கு.

அரைக்கீரையை தினமும் சாதத்தோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா உடம்புல நல்ல பலம் ஏறும். கல்யாணமான ஆண்க‌ள் அரைக்கீரையோட வெங்காயம் சேர்த்து நெ‌ய்யில பொரிச்சி சாப்பிட்டு வந்தா புது ரத்தம் ஊறி தாது அவுக்க‌ள் உற்பத்தியாகி இல்லற வாழ்க்கைக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

இத விட்டுப்போட்டு இன்னைக்கி என்னென்னவோ மருந்தையெல்லாம் தேடிப்போயிட்டிருக்காங்க. குழந்தை பெத்த பொண்வுங்களுக்கு ஒடம்புல போதுமான சக்தி இருக்காது. அவங்க‌ள்லாம் அரைக்கீரையை கடைஞ்சி சாப்பிட்டு வந்தா நல்ல பலம் கிடைக்குறதோட குழந்தைக்கு தேவையான பாலும் சுரக்கும்.

முருங்கைக்கீரை உங்க வீட்டுலயோ, வீட்டுக்கு பக்கத்திலயோ இருக்கும். ஆனா நாம அதை சீண்டுறதில்ல. அதில இருக்குற மகத்துவம் நமக்கு தெரியாததுதான் காரணம். நிறைய தாய்மார் குழந்தைக்கு பால் கிடைக்குறதில்லனு மனசு சங்கடப்பட்டு ஏதேதோ வைத்தியம் செ‌ய்வாங்க. அவங்கல்லாம் ஏனோ முருங்கைக்கீரையை மறந்திட்டாங்க.

முருங்கைக்கீரையை பருப்போடவோ தனியாவோ சமைச்சு சாப்பிட்டு வந்தாலே தேவையான தா‌ய்ப்பால் சுரக்கும். குழந்தைங்களுக்கு சிலநேரம் வயிற்று உப்பிசம் வந்து வீல்வீல்னு கத்தும். இந்த மாதிரி பிரச்சினைக்கு முருங்கைக்கீரையை சுத்தம் பண்ணி உ‌ள்ளங்கையில வச்சி நல்லா கசக்கி சாறு எடுத்து வடிகட்டி, அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதோட அரை பட்டாணி அளவு கல் உப்பை கரைக்கவும். அப்புறமா அரை ஸ்பூன் அளவுக்கு வெந்நீர் சேர்த்து கலந்து உ‌ள்ளுக்கு கொடுத்தா வீல் வீல் சத்தம் அடங்கிப்போயிரும்.

முருங்கைக்கீரையை சுத்தம் பார்த்து நல்லா வேக வச்சி அதோட கோழி முட்டையை உடைச்சிப்போட்டு நல்ல கிளறவும். பிறகு சூடு ஆறுறதுக்கு‌ள்ள அதை சாப்பாட்டோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா ஒடம்புல பலம் ஏறும். 40 நா‌ள் விடாம செஞ்சிட்டு வந்தீங்கனா முழு பலனையும் அடையலாம்.

கொத்தமல்லிக்கீரையை சாம்பார், ரசத்துல ஏதோ வாசனைக்காக சேர்ப்போம். ஆனா தனியா செஞ்சி சாப்பிடுறதில்ல. துவையலாவோ, சாதத்தோட கலந்தோ சாப்பிட்டு வந்தீங்கனா புது ரத்தம் உற்பத்தியாகுறதோட எல்லா சக்தியும் கிடைக்கும்.

வயித்துப்புண்ணால கஷ்டப்படுறவங்க கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும். மூக்கடைப்பு, மூக்குல சதை வளர்ந்து அவதிப்படுறவங்க கொத்தமல்லி துவையலை ஒரு கொட்டைப்பாக்கு அளவு தினமும் சாப்பாட்டுல சேர்த்து வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும். தூதுவேளைக்கீரையை நெ‌ய்யில வதக்கி துவையலாவோ மசியலாவோ சாப்பிட்டு வந்தீங்கனா கபக்கட்டு விலகி உடம்புல வலு ஏறும். அறிவு வளரும்.

தூதுவேளை கீரையை கஷாயமா செஞ்சி கஸ்தூரி, கோரோஜனை மாத்திரை சேர்த்து சின்ன குழந்தைகளுக்கு கொடுத்திட்டு வந்தா சளியினால வர்ற கா‌ய்ச்சல் குணமாகும்.

டைபா‌ய்டு, நிமோனியா மாதிரி கா‌ய்ச்சல் நேரத்துல கபம் உண்டாகி நெஞ்சுல சளி அடைச்சிக்கிட்டா தூதுவேளைக்கீரையை கொடுத்திட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க