
நீரிழிவு நோய், உடல் பருமன், இதயக் கோளாறுகள் போன்றவை அதிகமாக காரணம் நமது உணவில் நாம் செய்த மாற்றம்தான்.
இந்த ஐந்து வகையான உணவுகளை நாம் சாப்பிடுவதால்தான் நமக்கு எல்லா நோய்களும் வருகின்றன. அப்படியென்ன உணவுகள்? இதோ…
1.. செயற்கை வெண்ணெய்
செயற்கை வெண்ணெய் என்பது மாற்று கொழுப்புச்சத்து கொண்ட வெண்ணெய் ஆகும். இது உடல்நலனுக்கு நல்லது என்று கூறி விற்கப்படுகிறது. ஆனால், இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் எல்.டி.எல் கொழுப்பை அதிகரிப்பதாய் கூறப்படுகிறது.
2.. செயற்கை சர்க்கரை
செயற்கை இனிப்பூட்டிகள் எனப்படும் செயற்கை சர்க்கரையின் காரணமாக தான், இன்று நிறைய நீரிழிவு, உடல்பருமன் போன்ற உடல்நல குறைப்பாடு ஏற்படுகிறது. நாம் சாப்பிடும், அனைத்து குளிர்பானங்கள், சாக்லேட், பெரும்பாலான பிஸ்கட்டுகள் போன்றவற்றில் இது சேர்க்கப்படுகிறது.
3.. வறுக்கப்பட்ட உணவுகள்
வறுக்கப்பட்ட உணவுகளின் காரணமாக உடலில் தீயக் கொழுப்புச்சத்து, உடல் எடை அதிகரிப்பு, இதய பிரச்சனைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, வேகவைத்து உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
4.. பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் உணவுகள்
இன்று நாம் கண்ணாடி சுவர்களுக்குள் விற்கப்படும் உணவுகளை தான் நம்பி வாங்குகிறோம். ஆனால், அங்கிருந்து தான் நமது உடலுக்கு தீமைகள் நிறைய பரவுகின்றன. முக்கியமாக பதப்படுத்தி விற்கப்படும் உணவுகள். இதனால், நீரிழிவு, இதயக் கோளாறுகள், இரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பதிப்புகள் ஏற்படுகின்றன.
5.. சோடா பானங்கள்
நாம் இன்று விரும்பி பருகும் பானம் சோடா பானங்கள். அதிகமாக சாப்பிட்டால், பார்ட்டி, மது என அனைத்திலும் சோடா பானங்களை சேர்த்துக் கொண்டு வருகிறோம். மக்கள் மத்தியில் அதிகமாகி வரும் நீரிழிவு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சோடா பானங்கள் ஓர் பெரும் காரணம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.