
பொதுவாக ‘நட்ஸ்’ எனப்படும் கொட்டைப்பருப்பு வகைகளில் ஆரோக்கியம் அளிக்கும் சத்துகள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, ‘வால்நட்’ எனப்படும் வாதுமைப் பருப்பை அதிகம் பேர் விரும்பிச் சாப்பிடுவதில்லை என்றபோதும் இதில் சத்துகளுக்குக் குறைவில்லை.
சாக்லேட், கேக் போன்றவற்றில் சேர்க்கப்படும்போது தனி ருசி கொடுக்கும் வாதுமைப் பருப்பில் அதிக அளவு மெலட்டின் சத்து உள்ளது.
** வாதுமைப் பருப்பு ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. வாழ்நாளைக் கூட்டும் தன்மை கொண்டிருக்கிறது.
** நல்ல தூக்கத்துக்கு இது அவசியமாகும். இயற்கையாகவே அதிக மெலட்டின் இருப்பதால் வாதுமைப் பருப்பு மூளைக்கு ஓய்வு கொடுத்து நல்ல தூக்கத்தைத் தருகிறது.
** வாதுமைப் பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதால் ‘டிமென்சியா’ என்ற ஞாபக மறதி நோய் உண்டாகாமல் தடுக்கலாம்.
** இதில் உள்ள ஒமேகா 3 அமிலம், இதயத்துக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
** கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பைக் கூட்டுகிறது.
** ஒமேகா 3 மூளைக்கும் நல்லது. இது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
** ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வாதுமைப் பருப்பு உதவுகிறது.
** ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ் உள்ளிட்டவற்றில் இருந்து காக்கிறது.
** இது எலும்பை பலப்படுத்த உதவுகிறது.
** போலிக் அமிலம், ரிபோபிளேவின், தையாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துகள் வாதுமைப் பருப்பில் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் உணவில் அதிகமாக சேர்த்துகொள்ளலாம்.
** வைட்டமின் பி7 என்ற பயோடின் உள்ளதால் முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சிக்கும், உறுதித் தன்மைக்கும் உதவுகிறது.
** சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைக் குறைத்து முதுமையைத் தாமதப்படுத்துகிறது.