மசாலாப் பொருட்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. சில வகையான மசாலாப் பொருட்களை சாப்பிட்டால், உடலில் சேரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்.
உடலில் அதிகளவு கொழுப்பு சேருவது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இதனால் பல கொடிய நோய்களும் ஏற்படுகிறது. உடலில் சேரும் அதிக கொலஸ்ட்ரால் தமனி சுவர்களின் சேர்ந்து மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், சில வகையான உணவுகளை தவிர்த்திடுங்கள். கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். உண்மையில் நம் உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. ஒன்று ஹெச்.டி.எல் என்கிற நல்ல கொலஸ்ட்ரால், இரண்டாவது எல்.டி.எல் என்கிற கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். அதனால் நாம் உண்ணும் உணவில் மற்றும் உடல் சார்ந்த செயல்பாடுகளில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். சில வகையான மசாலாப் பொருட்கள் அதிக கொலஸ்ட்ராலை ஓரளவு குறைக்க உதவும். மசாலாப் பொருட்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை சேதமடையாமல் பாதுகாக்கிறது. நம் உணவில் மசாலாப் பொருள்களைச் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து மட்டுமின்றி, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
மஞ்சள்
undefined
மஞ்சள் ஒரு பழங்கால ஆயுர்வேதம் சார்ந்த பொருளாகும். இதனுடைய நன்மைகள் எண்ணிலடாங்கதாவை. இதில் குர்குமின் என்கிற சேர்மம் உள்ளது. நாள்பட்ட அழற்சி நுரையீரல் நோய்கள், கணைய அழற்சி, குடல் பிரச்சினைகள், இதய நோய்கள் போன்ற சுகாதார சீர்கேடுகளுக்கு மஞ்சள் பயனுள்ளதாக செயல்படுகிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், குர்குமின் உள்ளிட்டவை கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
பட்டை
இலவங்கப்பட்டை இதயம் தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும் அற்புதமான மசாலாப் பொருளாகும். உட்புற அடைப்புகளிலிருந்து உடலை சுத்தப்படுத்துகிறது. இதனுடைய ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இயற்கையான இன்சுலின் உற்பத்திக்கு உதவுகின்றன. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையை தேநீருடன் சேர்ப்பது, உள்ளிட்ட பல்வேறு சமையல் வகைகளில் பயன்படுத்தலாம்.
மிளகாய்
மிளகாயில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது கொழுப்பு செல்களை உடைக்க உதவுகிறது. அதன்மூலம் கொழுப்பு கட்டுக்குள் வருகிறது. மேலும் இதில் ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் அடங்கியுள்ளன. இதன்மூலம் செரிமானம் தொடர்பான பிரச்னை, சுவாச கோளாறுகள், இருமல், சளி போன்ற பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. எனினும் மிளகாயை மிகவும் அளவுடன் சாப்பிட வேண்டும். இதை அளவுக்கு மீறி சாப்பிட்டால், குடல் பிரச்னை மற்றும் மூலம் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்.
வெந்தயம்
வெந்தயத்தில் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் மறைந்துள்ளன. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் முக்கிய மசாலாப் பொருட்களில் வெந்தயமும் ஒன்று. குடல் மற்றும் கல்லீரலில் உள்ள கொழுப்பை உறிஞ்சுவதை மெதுவாக்கும் கலவைகள் இதில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க விரும்புபவர்களுக்கு வெந்தயம் நல்ல மருந்து. மிளகாயைப் போன்று வெந்தயத்தையும் அளவுடன் சாப்பிட வேண்டும். உங்களுக்கு மிகவும் குளிர்ந்த உடல் அல்லது சளிப் பாதித்த உடல் என்றால், வெந்தயத்தை அளவுடன் சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் உடலில் வெந்தயம் குளிர்ச்சியை கிளப்பிவிட்டு விடும்.
இந்த 4 பொருட்களை விட்டு விலகி இருங்கள்- புற்றுநோய் பாதிப்பு வராது...!!
சோம்பு
சோம்பு விதைகள் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டதாகும். அதேசமயத்தில் இதை உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொள்வதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. சோம்பு விதைகளில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும், உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.