முதுமை இல்லாத முகம் வேண்டுமா? இதை முயற்சி செய்து பாருங்கள்…

Asianet News Tamil  
Published : Jan 31, 2017, 12:57 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
முதுமை இல்லாத முகம் வேண்டுமா? இதை முயற்சி செய்து பாருங்கள்…

சுருக்கம்

முகத்தில் சுருக்கங்கள் இல்லாத இளமையான தோற்றம் என்பது வெகுசிலருக்கு இயற்கையிலேயே அமைந்திருக்கும். அனைவருக்கும் அதுபோன்ற தோற்றம் வேண்டும் என்றால் அதற்கு பராமரிப்பும் அவசியம்.

உங்கள் சருமத்தில் மெல்லிய சுருக்கங்களை கவனிக்காமல் விட்டால் மிக சில வருடங்களில் அவை அழுத்தமாக பதிந்து பிறகு முதுமையான தோற்றத்தை தந்துவிடும்.

அவ்வாறு சுருக்கங்கள் உங்கள் முகத்தில் உள்ளதென்றால் இந்த வழியைப் பயன்படுத்திப் பாருங்கள்.

வழி…

ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்குங்கள். இந்த கலவையை முகத்தில் மெல்லிய படலமாக போடவும். முழுவதும் காய்ந்ததும் முகத்தை கழுவுங்கள்.

பிறகு, ஒரு பெரிய வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மசித்து முகத்தில் போடுங்கள். அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆலிவ் எண்ணெயை எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு கலக்கவும். இந்த கலவையை முகத்தில் போட்டு அரை மணி நேரம் பிறகு முகத்தை கழுவவும்.

இந்த குறிப்புகள் அனைத்தும் செய்வதற்கு மிக எளியது. நேரமும் குறைவு. ஆனால் பலன்கள் நீங்கள் எதிர்ப்பார்ப்பதை விட அதிகம்.

PREV
click me!

Recommended Stories

கோடை வெப்பத்தில் இருந்து உடலை காக்கும் சிறந்த 5 இயற்கை பானங்கள்
summer skin care tips சம்மரில் தோல் கருப்பாகி விட்டதா? இதோ சூப்பர் வழி இருக்கே!