அழுக்குகள் இல்லாத அழகான நகங்கள் வேண்டுமா? இதோ டிப்ஸ்..

Asianet News Tamil  
Published : Feb 23, 2017, 01:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
அழுக்குகள் இல்லாத அழகான நகங்கள் வேண்டுமா? இதோ டிப்ஸ்..

சுருக்கம்

நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத்தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும்.

அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.

நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.

கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.

நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake