உங்களுக்கு பளபளப்பான முகம் வேண்டுமா? அரிசி கஞ்சி டிரை பண்ணுங்க…

Asianet News Tamil  
Published : Feb 23, 2017, 01:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
உங்களுக்கு பளபளப்பான முகம் வேண்டுமா? அரிசி கஞ்சி டிரை பண்ணுங்க…

சுருக்கம்

அரிசி கஞ்சி பல வித நன்மைகளை நம் சருமத்திற்கு தருகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம். உங்கள் சருமத்தை மிளிரச் செய்யும் குணங்கள் அரிசி கஞ்சியில் இருக்கிறது.

அரிசி கஞ்சியை எப்படி உபயோகித்தால் உங்கள் சரும பிரச்சனைகள் போகும் என்று பார்ப்போம்.

அரிசியை நீரில் வேக வைத்து அந்த நீரை வடிகட்டி ஆற வையுங்கள். அந்த நீரை அப்படியே 1 நாள் முழுவதும் வைத்தால் அது புளித்துப் போகும். இந்த புளித்து போன நிலையில் நல்ல பாக்டீரியா பெருகும்.

இது உங்கள் சருமத்திற்கு அட்டகாசமான பலனை தரக் கூடியது. இதில் மேலும் சிறிது நீர் சேர்த்து உபயோகிக்க வேண்டும்.

முகப்பருவிற்கு:

வடித்த கஞ்சியில் சிறிது நீர் சேர்த்து நீர்த்த நிலையில் அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து முகத்தில் தடவினால், முகப்பருக்கள் மாயமாக மறைந்துவிடும்.

சுருக்கங்களுக்கு:

சுருக்கங்களுக்கு இது சிறந்த சாய்ஸாகும். நுண்ணிய சுருக்கங்களையும் இந்த கஞ்சி போக்கிவிடும். தினமும் காலை மாலை உபயோகித்து பாருங்கள்.

பெரிய சரும துவாரங்களுக்கு:

சருமத்தில் பெரிய துளைகள் இருந்தால் அதில் எளிதில் அழுக்கு இறந்த செல்கள் அடைத்து முகத்தை வயதான தோற்றம் கொடுத்துவிடும். இதனை தடுக்க இந்த வடித்த கஞ்சியை உபயோகிக்கலாம்.

கருமையை போக்க:

கஞ்சியை முகத்தில் த்டவி 30 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் அழுவ வேண்டும். விரைவில் கருமை மறைந்து முகம் கழுத்து பளிச்சிடும்.

முகம் மெருகேற:

முகம் மேடுபள்ளமாக தொய்வடைந்து காணப்படுகிறதா? இது சிறந்த வழி. அரிசி கஞ்சியை முகத்தில் த்டவி 15 கழித்து கழுவவும். இதனால் முகம் சீராகவும் சுத்தமாகவும் இருக்கும்.

முகம் இறுக:

சிலருக்கு மத்திய வயதில் கன்னச் சதைகள் தொங்க ஆரம்பிக்கும். இதனை குணப்படுத்த அரிசி கஞ்சியை உபயோகித்தால் சருமம் இறுகி இளமையான முகத்தை பெறலாம்.

இதுபோன்ற வெளிப்புறத்திற்கு மட்டுமல்ல, அரிசி கஞ்சியைக் குடிப்பதால் உடல் நலத்திற்கும் நன்மையே.

PREV
click me!

Recommended Stories

இனி ஒரு பரு கூட வராது! இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க போதும்
தினமும் ஒரு கப் கிரீன் டீ… உடம்பில் நடக்கும் அதிசயம்.!!