இந்த ஆறு வழிகளை பயன்படுத்தி பழங்களில் இருக்கும் பூச்சிமருந்தை சுத்தம் செய்யலாம்…

 
Published : Feb 21, 2017, 01:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
இந்த ஆறு வழிகளை பயன்படுத்தி பழங்களில் இருக்கும் பூச்சிமருந்தை சுத்தம் செய்யலாம்…

சுருக்கம்

சந்தையில் கிடைப்பவை அத்தனையும் சுத்தமான பழங்கள் அல்ல. அவற்றில் பூச்சிக் கொல்லிகளின் தாக்கம் இருக்கலாம்; ரசாயனம் கலக்கப்பட்டிருக்கலாம்.

எனவே, பழங்களைச் சுத்தப்படுத்திவிட்டுப் பயன்படுத்துவதே சிறந்த வழிமுறை.

பழங்களைச் சுத்தப்படுத்துவதற்கு இங்கே ஆறு எளிய வழிமுறைகள்…

1.. பழங்களின் மேல் தோலில் படிந்திருக்கும் பூச்சி மருந்துப் படலம், பழத்தின் வீரியத்தைக் குறைத்துவிடும். மிதமான சூடுள்ள வெந்நீரால் பழங்களைக் கழுவினால், பூச்சி மருந்துப் படலம் முழுதாக நீங்கவில்லை என்றாலும், அதன் தாக்கம் குறையும். இதற்கு, அதிகச் சூடான வெந்நீரைப் பயன்படுத்தக் கூடாது.

2.. ஒரு பாத்திரம் நிறையத் தண்ணீரை ஊற்றி, அதில் ஆப்பிளைப் போட்டு, ஊறவைக்கவும். அதோடு சிறிது வினிகரைச் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் பழத்தை ஊறவைத்த பின்னர், ஆப்பிளை வெளியே எடுத்துத் தண்ணீரில் கழுவவும். இப்படிச் செய்வதால், ஆப்பிளின் மேல் தோலில் உள்ள பூச்சி மருந்தின் தாக்கம் குறையும்.

3.. ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றில் இரண்டு டேபிள்ஸ்பூன் பேகிங் சோடாவைக் கலந்துகொள்ளவும். இதை 100 மி.லி தண்ணீரில் கலந்து, பழங்களின் மேல் ஸ்ப்ரே செய்யவும். அதன் பின்னர் பழங்களைத் துடைத்தால், எலுமிச்சையில் உள்ள கிருமி நாசினி, பூச்சி மருந்தின் தாக்கதை அடியோடு நீக்கிவிடும்.

4.. ஆப்பிள், வெங்காயம், இஞ்சி, கேரட், பீட்ரூட், மாம்பழம், ஆரஞ்சு, அவகேடோ, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலை உரிப்பது எளிது. இவற்றைப் பயன்படுத்தும்போது தோலை உரித்தாலே பெரும்பான்மையான பூச்சி மருந்தின் தாக்கம் போய்விடும். அதன் பிறகு கழுவிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும்.

5.. தண்ணீரில் அரை டீஸ்பூன் உப்புச் சேர்த்து, அதில் பழங்களை ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். பின்னர் பழங்களை தண்ணீரில் கழுவ வேண்டும். உப்பில் உள்ள சோடியம் பூச்சி மருந்தின் வீரியத்தைக் குறைக்கக்கூடியது.

6.. பழங்களைத் தண்ணீல் கழுவிய பின்னர், சுத்தமான துணில்யால் துடைக்கவும். இதனால் பழத்தின் மேல் தோலில் ஒட்டியிருக்கும் மீதமுள்ள பூச்சி மருந்தும் வெளியேறிவிடும்.

PREV
click me!

Recommended Stories

Ladies Finger in Winter : குளிர்காலத்துல வெண்டைக்காய் 'கண்டிப்பா' சாப்பிடனும் தெரியுமா? நிபுணர்கள் சொல்ற அறிவியல் உண்மை
Green Peas Benefits : பச்சை பட்டாணியை அடிக்கடி சாப்பிடுங்க... பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வா அமையும்