
நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படை உணவு ஆகும். சுவாசிக்கத் தொடர்ந்து தூய காற்று தேவைப்படுவதைப் போல உண்பதற்கு உணவும் நீரும் வாழ்நாள் முழுக்கத் தவிர்க்க முடியாத தேவையாகும்.
ஒவ்வொரு நாளும் நமது உடல் ஒரு விநாடி கூட ஓய்வின்றி இயங்கிக்கொண்டு இருக்கிறது. அந்த இயக்கத்தின் விளைவாகத்தான் உலகில் நாம் பிறக்கவே முடிகிறது.
கருவில் இருந்து மரணம் வரையிலும் இயக்கம் தொடர்கிறது. பிறந்து வளர்ந்து வாழும் வரை மனித உருவில் இயங்குகிறோம். அந்த வளர்ச்சிக்கு உணவு அவசியம்.
ஓவ்வொரு விநாடியும் இயக்கத்தால் நிலைமாறி உடம்புக்குப் பொருத்தமில்லாத உடற்கூறுகள் சிதைந்து மறைகின்றன.
அதை ஈடுசெய்வதற்குப் பொருத்தமான உணவை உட்கொள்ள வேண்டும். ஆனால், கிடைக்கும் அனைத்தையும் உண்ணாமல், நம் உடலுக்குத் தேவையானதை உண்பதே சிறப்பு.
அதிலும், நமக்கு ஒத்துக் கொள்வதை உண்பது மிகச் சிறப்பு.
“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” எனபது நம் முன்னோர்களின் வாக்கு. ஒவ்வொரு முறை உண்ணும் போதும் இதை மனதில் வைத்து உண்டால் நீங்களும் பல்லாண்டு வாழலாம்.