உங்களுக்கு செரிமான பிரச்சனை இருக்கா? அப்போ இந்த ஆசனத்தை உடனே செய்யுங்க...!!

Published : May 24, 2023, 12:24 PM ISTUpdated : May 24, 2023, 12:35 PM IST
உங்களுக்கு செரிமான பிரச்சனை இருக்கா? அப்போ இந்த ஆசனத்தை உடனே செய்யுங்க...!!

சுருக்கம்

செரிமான அமைப்பை சீர் செய்வதற்கு வஜ்ராசனம் சிறந்தது. இது உடல்நிலை பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. இதன் மூலம் நாம் ஏராளமான நன்மைகள் பெறலாம்.

நாம் நமது உடலைக் கட்டுக்கோப்பாக வைக்கவும், தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், பல விதமான  உடற்பயிற்சிகள் மற்றும் உணவுத் திட்டங்கள் நமக்கு உதவுகிறது.

வஜ்ராசனம்:
இந்நிலையில் ஒரே ஒரு ஆசனம் செரிமான அமைப்பைச் சீர்செய்வதோடு மட்டுமல்லாமல், பலவிதமான உடல்நலப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது. அந்த ஆசனத்தின் பெயர் தான் வஜ்ராசனம்.

சர்க்கரை அளவு குறையும்:
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வஜ்ராசனம் செய்யலாம். இதை தினமும் இதை செய்வதன் மூலம் உங்களுக்கு இரத்த சர்க்கரை அளவு மேம்படும். இந்த ஆசனம் மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவை திறம்பட குறைக்கும். மேலும் இது இதயம் தொடர்பான நோய்களையும் குணப்படுத்துகிறது.

மன அமைதி:
உங்களுக்கு ஒரு விதமான பதற்றம் ஏற்பட்டால் வர்ஜாசனம் செய்யுங்கள். இது உங்கள் உடலில் செறிவு நிலையை அதிகப்படுத்தி கவனத்தை மேம்படுத்துகிறது. இந்த ஆசனம் உங்களுக்கு மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை நீக்குகிறது.

செரிமான மண்டலத்தைச் சீராக வைக்க:
வஜ்ராசனம் செய்வதன் மூலம் செரிமான மண்டலம் மேம்படும். இந்த ஆசனத்தைச் செய்யும் போது கால்கள் மற்றும் தொடைகளுக்கு இடையில் தடையில்லா இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதியில் முன்னோக்கி நகர்கிறது.

இதையும் படிங்க: National Brother's Day: கண்ணுக்கு கண்ணாக.. உடன் பயணிக்கும் சகோதர்களை கொண்டாடும் தினம் இன்று!!

வயிற்று வலியிலிருந்து நிவாரணம்:

வஜ்ராசனம் செய்வதன் மூலம் கீழ் முதுகின் தசைகள் வலுவடையும். அவ்வப்போது ஏற்படும் முதுகுவலி மற்றும் அசௌகரியமான உணர்வையும் இது குறைக்கும். எனவே, இதுப்போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் தினமும் இந்த ஆசனத்தை செய்து பலவகையான நன்மைகளைப் பெறுங்கள்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க