இந்தப் பழத்தை முகத்தில் தடவினால் கரும் புள்ளிகள் நீங்கி முகம் பளப்பளப்பாக மாறும்…

Asianet News Tamil  
Published : Sep 18, 2017, 01:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
இந்தப் பழத்தை முகத்தில் தடவினால் கரும் புள்ளிகள் நீங்கி முகம் பளப்பளப்பாக மாறும்…

சுருக்கம்

use this fruit to get shinning face

 

 

** பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

 

** பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ’ குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.

 

** கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம்.

 

** அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.

 

** சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.

 

** மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

 

** பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.

 

** பப்பாளியில் `பப்பைன்’ என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake