வீட்டிலிருந்தபடியே இந்த டிப்ஸ்களை உபயோகித்து பற்களிலுள்ள மஞ்சள் கறைகளை போக்கலாம்...

First Published Mar 23, 2018, 1:49 PM IST
Highlights
Use these tips to get rid of yellow stains on the teeth by using home remedies ...


பற்கள் மஞ்சள் நிறத்தில் கறைகளாக சிலருக்கு காணப்படும். சரியாக பல் துலக்காததால் அவைகள் கிருமிகளுடன் சேர்ந்து அங்கேயே கெட்டியாக ஓடு போல் தங்கிவிடும்.

இந்த மஞ்சள் கறை ஈறு, பற்கள் மட்டும் சேதாரப்படுத்துவதில்லை உங்கள் மொத்த ஆரோக்கியத்தையும் சீர்குலைக்க வைக்கும். எனவே இந்த கறைகளை உடனடியாக நீக்க முயற்சியுங்கள். 

மஞ்சள் கறைகளை போக்க மருத்துவரிடம்தான் போக வேண்டும் என்றில்லை. வீட்டிலிருந்தபடியே நீங்கள் இந்த டிப்ஸ்களை  உபயோகித்து உங்கள் பற்களிலுள்ள கறைகளை அகற்றலாம். எப்படி என பாருங்கள்.

டிப்ஸ் -1

தேவையானவை :

நீர் – அரை லிட்டர்

நட்ஸ் ஓடு – 60 கிராம் (பொடி செய்தது)

செய்முறை :

வால் நட் போன்று ஏதாவது ஒரு நட்ஸின் ஓட்டை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு அலுமினிய பாத்திரத்தில் நீர் மற்றும் நட்ஸ் ஓடுப் பொடியை சேர்த்து கொதிக்க விடுங்கள். அடுப்பை குறைவான தீயிலேயே வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பின்னர் இறக்கி வையுங்கள். இப்போது இந்த கலவை பேஸ்ட் போல் குழைந்து காணப்படும். தினமும் 5 நிமிடம் இந்த பேஸ்ட்டால் பற்களை இருமுறை துலக்குங்கள். கறை காணாமல் போய் விடும்.

டிப்ஸ்- 2

தேவையானவை :

சூரியகாந்தி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

நீர் – அரை லிட்டர்

செய்முறை :

சூரிய காந்தி விதைகளை பொடிசெய்து கொள்ளுங்கள் அல்லது அப்படியே உபயோகப்படுத்தலாம். நீரில் சூரியகாந்தி விதை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குறைவான தீயில் 1 மணி நேரம் கொதிக்க வைக்கவும்.

பின்னர் கெட்டிப்பதத்தில் வரும் இந்த கலவையை கொண்டு தினமும் 2 நிமிடம் பல் துலக்கவும். இது கடினமான கறைகளையும் அகற்றும்.
 

click me!