இதோ பொடுகை போக்க சில டிப்ஸ்…

 
Published : Jul 03, 2017, 05:12 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
இதோ பொடுகை போக்க சில டிப்ஸ்…

சுருக்கம்

Treatment for dandruff

சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்த பின்னர், 15 நிமிஷம் கழித்து குளிக்கலாம்.  தலை வறட்சி ஏற்பட்டால், வாரம் ஒருமுறை நல்லெண்ணை தேய்த்து 'ஆயில் பாத்' எடுப்பது நல்லது.

பொடுகு வர உடல் சூடு முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால், சூடு தணிக்கும் வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும். பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து, 15 நிமிஷம் கழித்து குளித்தால் சில நாட்களில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்கலாம். குளித்து முடித்த பின் தலையை துவட்டாமல், கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலையில் தோய்த்து திரும்பவும் குளித்து வந்தால் பொடுகிலிருந்து விடுபடலாம்.

வேப்பிலையுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின் குளிக்கலாம். தேங்காய் எண்ணையுடன் வேப்பெண்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

உப்பு கலக்காத வேப்பம்பூ, 50 கிராம் எடுத்து, அதை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறியபின் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
ஆலிவ் எண்ணெயுடன் நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பிறகு முழுகி வந்தால் பொடுகு குறையும்.

PREV
click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
கல்லீரலை நாசமாக்கும் 7 மோசமான உணவுகள்