
'நெப்ராடிக் சிண்ட்ரோம்' என்பது ஊதுகாமாலை சிறுநீரகங்களில் வடிகட்டியாக செயல்படும், க்ளொமெருலஸ்சில், ஆன்டிஜென்- ஆன்டிபாடி (Antigen antibody) ஏற்படுத்தும் மாற்றத்தினால்,சிறுநீருடன் சேர்ந்து புரதம், குறிப்பாக ஆல்புமின் வெளியேறுகிறது.
இதனால் ரத்தத்தில் ஆல்புமின் அளவு குறைந்து, நீர் ரத்தக் குழாய்களிலிருந்து வெளியேறி, திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
இப்பாதிப்பு, முதல் நிலை மற்றும் தீவிர நிலை என பிரிக்கப்படுகிறது. முதல்நிலைக்கு, ஸ்டீராய்டு மருந்துகளே போதுமானது.
தீவிர நிலைக்கு ஸ்டீராய்டு மருந்துகளோடு, தீவிர சிகிச்சையும் தேவைப்படும். ஸ்டீராய்டு மருந்துகளுக்கு,ஊதுகாமாலை கட்டுப்படவில்லையென்றால், வீரியமுள்ள மாற்று மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
ஊதுகாமாலை பாதிப்பு இருக்கும் குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி தான் உணவு தர வேண்டும். ஒருமுறை இந்த பாதிப்பு வந்தால்,மீண்டும் வரலாம். ஆனால், இந்த சதவீதம் மிகவும் குறைவு.