உங்களுக்குத் தெரியுமா? கண் அடிக்கடி துடிப்பதற்கு மன அழுத்தம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்…

 
Published : Jul 03, 2017, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
உங்களுக்குத் தெரியுமா? கண் அடிக்கடி துடிப்பதற்கு மன அழுத்தம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்…

சுருக்கம்

Do you know Often the cause of the eye can be a cause of stress ...

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். இது தொடர்பில் ஒருசில மூட நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன.

ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப்போகிறது. அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்ற நம்புகின்றனர்.

நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல் குருட்டுத்தனமாக பலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறி. அது மட்டுமல்லாமல் கண்கள் துடிப்பதற்கு மியோகிமியா என்று பெயர்.

இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்களாகும். சிலருக்கு கண் துடிப்பானது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம்.

சரி, இப்போது இந்த கண் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

மன அழுத்தம்

மன அழுத்தமானது அதிகம் இருந்தாலும் கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட்டால் அடிக்கடி கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.

தூக்கமின்மை

மன அழுத்தம் அதிகம் இருந்தால் தூக்கமின்மை பிரச்சினையை சந்திக்க நேரிடும். இவ்வாறு சரியான தூக்கம் இல்லாவிட்டால் கண்களானது துடிக்கும்.

கண்களுக்கு சிரமம்

கண்களுக்கு அதிகப்படியான சிரமத்தைக் கொடுத்தாலும் கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். உதாரணமாக படிக்கும் போது சரியாக தெரியாவிட்டால் அப்போது கண்களை பரிசோதித்து அதற்கு கண்ணாடிகளை போடாமல் சிரமப்படுத்தி அப்படியே படித்து கண்களுக்கு சிரமம் கொடுத்தாலும் கண்கள் துடிக்கும்.

மேலும் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை பார்த்துக் கொண்டே இருந்தால் கண்கள் களைப்படைந்துவிடும். இதனால் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு துடிக்க ஆரம்பிக்கும்.

எனவே, கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பயன்படுத்தும் போது சரியான கண்ணாடிகளை அணிந்து கொண்டு பயன்படுத்தினால் கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.

காப்பைன்

அதிகமாக காப்பைன் உள்ள பொருட்களான காபி, டீ போன்றவற்றை அருந்தினாலும் கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய பொருட்களை அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.

ஆல்கஹால்

ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண்கள் துடிக்கும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகாமல், மருந்து போன்று எடுத்துக் கொள்வது நல்லது.

கண் வறட்சி

கண் வறட்சியானலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். போதிய தண்ணீர் பருகாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பது, காப்பைன் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றால் கண்களானது வறட்சியடைகிறது. ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த்தால் கண் வறட்சியில் இருந்து விடுபடலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு

சில ஆய்வுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்களில் உள்ள தசைகள் துடிக்க ஆரம்பிக்கும் என்று சொல்கிறது. அதிலும் மக்னீசியம் குறைபாடு இருந்தால் கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது.

ஆகவே சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறைகளை மேற்கொண்டால் கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.

PREV
click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
கல்லீரலை நாசமாக்கும் 7 மோசமான உணவுகள்