உதடுகளை வசீகரமாக இதைச் செய்யுங்க...

 
Published : Jul 03, 2017, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
உதடுகளை வசீகரமாக இதைச் செய்யுங்க...

சுருக்கம்

Tips for lips

உதடுகளை வசீகரமாக அழகுபடுத்த விரும்புபவர்கள் அழகு சாதன பொருட்களை மட்டும் பயன்படுத்தாமல் வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே உதடுகளை  பொலிவாக்கலாம்..

*ஆலிவ் ஆயில் ஸ்கினிற்கு மிகவும் நல்லது. எனவே ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரை கலந்து உதட்டில் பூசி வந்தால் இறந்த செல்கள் வெளியேறி உதடுக்கு பொலிவு கிடைக்கும்.

* ஈரத்தன்மையின்றி உலர்ந்து காணப்படும் உதடுகளுக்கு தேனை பயன்படுத்தலாம். தேனுடன் எலுமிச்சை சாறு, சர்க்கரை கலந்து தொடர்ச்சியாக பூசி வந்தால் உதடுகள் மென்மையுடனும்,பளபளப்புடனும் ரோஸ் நிறத்துடன் காணப்படும்.

* உதடுகள் பளிச்சென்று தோற்றமளிக்க புதினாவையும்  பயன்படுத்தலாம். புதினாவை சாறு பிழிந்து சர்க்கரையுடன் கலந்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் பளபளக்கும்.
* குங்குமப்பூ உதட்டின் கருமை நிறத்தை மாற்றும் தன்மைகொண்டது. பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் கருமை நிறம் மாறி அழகாகும்.

PREV
click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
கல்லீரலை நாசமாக்கும் 7 மோசமான உணவுகள்