மூக்கடைப்பில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய இயற்கை வைத்தியங்கள்.

 
Published : Jul 03, 2017, 01:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
மூக்கடைப்பில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய இயற்கை வைத்தியங்கள்.

சுருக்கம்

Natural treatment for cold

மூக்கடைப்பு ஏற்பட்டால், நிம்மதியான தூக்கம் வராது. அதுமட்டுமின்றி, கடுமையான காது வலியையும் ஏற்படுத்தும். மூக்கடைப்பிற்கு உடனே அதற்கு சிகிச்சை எடுத்து விட வேண்டும். 

நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சிகிச்சை அளிக்கலாம். மூக்கடைப்பில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ...

*  ஒரு தம்ளர் தண்ணீரில் 3 பூண்டு பற்களைப் போட்டு, இத்துடன்1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, தொடர்ந்து குடித்து வந்தால், முகத்தில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி,மூக்கடைப்பில் இருந்துவிடுபடலாம். 

* கைக்குட்டையில் 2-3 துணிகள் நீலகிரி தைலம் ஊற்றி, அதனை சுவாசித்துக் கொண்டிருந்தால், மூக்கடைப்பு இருக்காது. வேண்டுமெனில் இந்த ஆயிலை தலையணையில் சிறிது தெளித்துக் கொள்வதும் நல்லது.

* மருத்துவ டீ குடிப்பது சாதாரண டீ குடிப்பதை காட்டிலும் நல்லது. தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

Blood Clot : இரத்தக் கட்டை வலியில்லாமல் 'குணமாக்கும்' சூப்பரான வீட்டு வைத்தியங்கள்!! ட்ரை பண்ணி பாருங்க
Winter Skincare Tips : பனியால் சருமத்தில் ஏற்படும் சொறியைத் தடுக்க ஈஸியான வழிகள்!