உங்களுக்கு ’லோ சுகர்’ பிரச்னை உள்ளதா? அப்போது இதைப்படிங்க முதல்ல..!!

By Dinesh TGFirst Published Jan 8, 2023, 10:06 AM IST
Highlights

உங்கள் ரத்தத்தில் சக்கரை அளவு கட்டுக்குள் இருப்பதை வைத்து, பாதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. இது அதிகரிக்கும் போது நீரிழிவு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதேசமயத்தில் சக்கரை அளவு குறையும் போது, உடலில் குறைந்த ஆற்றல் நிலவுகிறது.
 

நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் தன்மை மற்றும் உணவுப் பழக்கத்தை வைத்து தான் ரத்தத்தில் சக்கரை அளவு குறைவது மற்றும் அதிகரிப்பது  தீர்மானிக்கப்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் திடீர் வீழ்ச்சி, திடீர் உயர்வை விட ஆபத்தானது. இதை அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ள முடியாது. எனவே நமது ரத்தத்தில் சர்க்கரை சீராக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த, வழக்கமான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.

திடீரென உடலில் சோர்வு ஏற்படுவது, உடலின் சில பகுதிகள் மரத்துப் போகுதல், மயக்கநிலைக்கு செல்லுதல், கை மற்றும் கால்களில் உதறல் எடுப்பது போன்றவை ரத்தத்தில் சக்கரை அளவு குறைவதற்கான முக்கிய அறிகுறிகளாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பிட்ட சில அறிகுறிகள் உடலில் சக்கரை அளவு அதிகரிப்பதற்கான காரணங்களாகவும் சொல்லப்படுகின்றன.

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சில சமயங்களில் இனிப்பு சாக்லேட்டுகளைத் தவிர்ப்பது நல்லது. இருப்பினும், சில சமயங்களில் ஓரிரு சாக்லேட்டுகள், பழச்சாறுகள் மற்றும் சர்க்கரைப் பொருட்களை மிதமாக எடுத்துக் கொள்வது நல்லது. சிறிது நேரம் கழித்து, உங்கள் அறிகுறிகள் மறைந்து, நீங்கள் உங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள். உணவுப் பழக்கத்தை அளவுடன் வைத்துக்கொள்வது, தேவையான அளவு மட்டுமே கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது போன்றவை உங்களை இயக்கநிலையில் வைத்திருக்கும்.

வெல்லத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கா? அட... இது தெரியாம போச்சே..!!

உடலுக்கு தேவையான அளவு உணவு கிடைக்காத போது  சர்க்கரை அளவு குறையும். எப்போதும் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ள உணவை சாப்பிட்ட பிறகு, 15 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கவும். இரத்த சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு வரும் வரை 15-15 நிமிட இடைவெளியில் இதைச் செய்யுங்கள். எதிர்காலத்தில் சர்க்கரை அளவு குறையும் போது எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள இப்பயிற்சி உதவும்.

சக்கரை நோயாளிகள் அவ்வப்போது பரிசோதனை மேற்கொண்டு, தங்களுடைய நோய் பாதிப்பு அளவை தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் சாப்பிடும் உணவில் ஏதாவது மாறுபாடு இருந்தாலோ, அல்லது சக்கரை அளவில் மாறுபாடு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. எப்போதும் உங்களுடைய உடலில் ரத்தத்தில் சக்கரை அளவை நார்மலாக வைத்திருப்பதை கடைப்பிடிக்க வேண்டும்.

click me!