ஆண்களுக்கான விந்தணுக்களின் தரம் மற்றும் இயற்கையான கருத்தரிப்பு வாய்ப்புகளை மேம்படுத்த ஆண்கள் செய்ய வேண்டியது இதைத்தான்.
குழந்தைகளைப் பெறுவது ஒரு மகிழ்ச்சியான, அதேசமயத்தில் பல்வேறு சவால்களை கொண்ட அனுபவமாகும். இன்றைய காலத்தில் பல தம்பதிகள் குழந்தை பேறுக்கு வேண்டி பல இன்னல்களை சந்திக்க வேண்டியதாக உள்ளது. அவர்களைப் போன்றோருக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒரு குடும்பத்தைத் நடத்த, குழந்தையின் அவசியம் தாமதமாகத்தான் புரிகிறது. உயிரியல் தொழில்நுட்ப தகவல்களுக்கான தேசிய மையம் வெளியிட்ட செய்தின்படி, 40-50 விழுக்காட்டு தம்பதிகளில் ஆண்களுக்குத் தான் அதிகளவில் குழந்தையின்மை பிரச்னை இருப்பதாக கூறுகிறது. அதனால் இதை படிக்கும் ஒவ்வொரு ஆணும், திருமணத்துக்கு முன்பு விந்தணுக்களின் தரத்தை பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது. அப்போதுதான் திருமண வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்னையும் இருக்காது.
அடிப்படை காரணம்
கருவுறுதலுக்கு வேண்டிய போதிய விந்தணுவை உற்பத்தி செய்யமுடியவில்லை என்பதே முக்கிய காரணமாகும். கடந்த 46 ஆண்டுகளில் 50%க்கும் அதிகமான விந்தணுக்களின் தரம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மரபணுக் கோளாறுகள், முந்தைய நோய்த்தொற்றுகள் மற்றும் விந்தணுக்களில் ஏற்பட்ட அதிர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் விந்தணுக்களின் தரம் குறைந்துவிடுகிறது. அதுமட்டுமின்றி, பொருத்தமற்ற பாலியல் செயல்பாடு அல்லது விறைப்புத்தன்மை அல்லது விந்துதள்ளல் செயலிழப்பு போன்ற பிற பிரச்சனைகளாலும், ஆண்களுக்கு இப்பிரச்னை ஏற்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகள், நச்சுத்தன்மையுள்ள சூழலுக்கு வெளிப்பாடு மற்றும் நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நாட்பட்ட நிலைமைகளும் காரணமாக அமைவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
செய்ய வேண்டியவை
ஆரோக்கியமான வாழ்கை முறை
நல்ல தரமான விந்தணுக்களை உறுதி செய்வதற்கான முதல் மற்றும் முக்கிய படி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதாகும். புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் இருக்கவே கூடாது. இது உங்கள் விந்தணுக்களை அதிக அளவில் பாதிக்கிறது. ஏனெனில் அதிகப்படியான குடிப்பழக்கம் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைக் குறைக்கலாம், ஆண்மைக்குறைவைத் தூண்டலாம். இதனால் விந்தணுக்களின் தரத்தில் பிரச்னை ஏற்படலாம். அதிகளவில் ஆண்டிஆக்சிடண்டுகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். ஆரோக்கியமான எடையை பராமரிப்பது மிகவும் முக்கியம்.
மனைவியின் உதடுகள் முதல் கடவுள் மந்திரம் வரை- கால்பந்தாட்ட வீரர்களின் பிரபலமான டாட்டூகள்..!!
மனவலிமை
மன அழுத்தம் நம் உடலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. இது உங்கள் பாலியல் செயல்பாட்டை பாதிக்கும் மற்றும் விந்தணுக்களை உருவாக்க தேவையான ஹார்மோன்களையும் பாதிக்கும். உங்கள் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த, உங்கள் மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சில வகையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது மன அழுத்தத்தை சமாளிக்க ஒரு சிறந்த வழியாகும். இது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், விந்தணுக்களுக்குப் பாதுகாப்புக் கவசமாகச் செயல்படும் ஆற்றல்மிக்க ஆண்டிஆக்சிடண்ட் என்சைம்களின் அளவையும் அதிகரிக்கிறது.
தற்போதைய காலத்தில் தம்பதிகளிடையே குழந்தையின்மை பிரச்னை முக்கிய கவலையாக மாறிவிட்டது. அதிலும் குறைபாடு ஆண்களிடம் இருந்தால், பிரச்னையை கையாள்வது பெரும் சவாலாக உள்ளது. விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துவதில் வாழ்க்கை முறை தேர்வுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் பெரியளவில் மாற்றங்கள் ஏற்படும். அதேபோன்று மனநிலைமையும் மிகவும் வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை திறம்பட கட்டுப்படுத்துவது அவசியம், இதன்காரணமாகவும் விந்தணு உற்பத்தியில் சிக்கல் நீடிக்கலாம்.