Maize: என்றும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ இந்த ஒரு தானியம் போதும்!

By Dinesh TG  |  First Published Dec 15, 2022, 8:59 PM IST

பலரும் ஆரோக்கியம் அற்ற உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், நம் முன்னோர்கள் அந்த காலத்தில் சத்தான உணவுகளை உண்டு வாழ்ந்ததால் தான், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர்.


நம் வாழ்வில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மிக முக்கிய அங்கம் வகிப்பது உணவுகள் தான். நாம் இப்போது, நமது உடலுக்குத் தேவையான சரியான உணவுகளை சாப்பிடுகிறோமா எனக் கேட்டால், இல்லை என்று தான் சொல்வோம். ஏனெனில், பலரும் ஆரோக்கியம் அற்ற உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், நம் முன்னோர்கள் அந்த காலத்தில் சத்தான உணவுகளை உண்டு வாழ்ந்ததால் தான், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர்.

ஆரோக்கியமான உணவு

Latest Videos

undefined

நம் முன்னோர்கள் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தனர். நல்ல தரமான இயற்கை உணவுகளை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதனால் தான் நோய் நொடியின்றி பல காலம் வாழ்ந்தனர்.

நாம் இன்றைய காலகட்டத்தில் அரிசி உணவைத் தான் அதிகமாக சாப்பிட்டு வருகிறோம். ஆனால், நம் முன்னோர்கள் சோள தானியத்தை தான் உணவாக சாப்பிட்டார்கள். இந்த ஆரோக்கிய உணவு, நம் முன்னோர்களின் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியது.

சோள தானியம் (Maize)

சோள தானியத்தை நீங்கள் பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ கூட சாப்பிடலாம். இது வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை போன்ற நிறங்களில் நமக்கு கிடைக்கிறது. சோளத்தில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்த பருவகால விருந்தாக அமைகிறது. இது தசைகளை உருவாக்குவதற்கும் மற்றும் உடலில் இருக்கும் செல்களை மீண்டும் உருவாக்குவதற்கும் உதவியாக உள்ளது.

சோள தானியத்தில் துத்தநாகம், இரும்பு, கால்சியம், தாமிரம் மற்றும் வைட்டமின்கள் பி1, பி2, பி5 மற்றும் பி6 போன்றவற்றுடன் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜன் ஏற்றங்களில் நிறைந்துள்ளது. இவற்றினால் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. சோளத்தில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இது குடலை வலுப்படுத்த உதவுவதோடு, உடலில் செரிமானத்தை சீராக வைத்திருக்கவும் உதவி புரிகிறது. சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் பருமனை கட்டுப்படுத்த முடியும்.

Weight Gain: உடல் எடையை அதிகரிக்க நினைப்பவரா நீங்கள்: அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்!

சோளம் சாப்பிடுவதன் நன்மைகள்

  • இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்துவதில் சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • சோளம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. ஆகையால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.
  • சோளம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
  • உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்  உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டியாக சோளம் கருதப்படுகிறது.
  • நாள்பட்ட நோய் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, உங்களின் அன்றாட உணவில் சோளத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். 
  • செலியாக் நோய் உள்ள நபர்களுக்கு ஆரோக்கியமான உணவாக சோளம் இருக்கும்.
  • உடல் எடையைக் குறைக்க உகந்த உணவாக சோளம் இருக்கிறது. வெகு விரைவாக கூடுதல் எடையை குறைத்து விடலாம்.
click me!