கடுமையான வாய் துர்நாற்றத்தையும் போக்கும் இந்த சூப்பர் மூலிகை டீ...

 
Published : Mar 08, 2018, 01:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
கடுமையான வாய் துர்நாற்றத்தையும் போக்கும் இந்த சூப்பர் மூலிகை டீ...

சுருக்கம்

This is a superb herbal tea that tries to get rid of acute odor.


கடுமையான வாய் துர்நாற்றத்திற்கு பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே முதன்மைக் காரணம். இதுதவிர நுரையீரல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளும், செரிமானக் கோளாறுகளும் காரணமாக அமைகின்றது. எனவே இயற்கை முறையில் நமது வாயின் கடுமையான துர்நாற்றத்தை போக்குவதற்கு அருமையான மூலிகை டீ இதோ!

தேவையான பொருட்கள்

புதினா இலை – 5

தேயிலை – 1 டீஸ்பூன்

தேன் அல்லது பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன்

பால் – 1/4 கப்

செய்முறை

ஒரு டம்ளர் நீரில் 5 புதினா இலை மற்றும் 1 டீஸ்பூன் தேயிலை ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின் இது பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு தேவைப்பட்டல் அதில் சிறிதளவு பால் கலந்து குடிக்கலாம்.

இந்த டீயில் பால் சேர்க்காமல் குடிப்பது தான் மிகவும் நல்லது. மேலும் இந்த புதினா டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளதால், நமது உடம்பின் உட்புற புண்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

PREV
click me!

Recommended Stories

Morning Habits For Belly Fat : நீண்ட ஆயுளுக்கு இது 'முக்கியம்' ஆரோக்கியமில்லாத தொப்பையை குறைக்க 'இதை' செய்தால் போதும்!!
Coconut Milk for Kids : பெற்றோரே! ஒல்லியா குழந்தைகளை கொழு கொழுனு மாற்ற சூப்பர் வழி! தேங்காய் பால் போதும்!