ஆறடி கூந்தல் வளர்க்க ஆசைப்படுவோர்க்கு இந்த டிப்ஸ்…c

Asianet News Tamil  
Published : Feb 03, 2017, 02:00 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
ஆறடி கூந்தல் வளர்க்க ஆசைப்படுவோர்க்கு இந்த டிப்ஸ்…c

சுருக்கம்

இடுப்பளவு கூந்தலே இப்போது அதிசயமாய் பார்க்கிக்கிறோம். ஆறடி கூந்தல் என்பது அந்த காலம் என்று பேச்சு வழக்கிற்கு மட்டும் வந்துள்ளது.

உங்களுக்கு கூந்தல் வளர வேண்டும் என்று விருப்பமிருந்தால் இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறைப்புகளை வாரம் 1-3 முறை உபயோகித்துப் பாருங்கள். அடர்த்தியான முடியை நீங்களும் பெறுவீர்கள்.

தேயிலை மர எண்ணெய் :

தேயிலை மர எண்ணெய் உங்கள் கூந்தலில் ஸ்கால்ப்பை சுத்தம் செய்யும். பொடுகு போன்ற தொற்றுக்களை அழிக்கும். கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். தேயிலை மர எண்ணெயை கொண்டு எப்படி உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யலாம் எனப் பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெயுடன் :

கால் கப் தேங்காய் எண்ணெயில் சில துளி தேயிலை மர எண்ணெயை கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால், முடி உதிர்தல் நிற்கும்.

ஷாம்புடன் கலந்திடுங்கள் :

நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் ஷாம்புவில் சில துளி இந்த தேயிலை மர எண்ணெயை கலந்து குளியுங்கள். இதனால் வேகமாக முடி வளரும். ஷாம்புவில் இருக்கும் கெமிக்கலால் பிரச்சனை ஏற்படாது.

தேன் மற்றும் தேயிலை மர எண்ணெய் :

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் தேன் 1 ஸ்பூன் மற்றும் தேயிலை மர எண்ணெய் சில துளி கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஷாம்பு போட்டு அலசியதும், இந்த நீரில் ஸ்கால்ப்பை மசாஜ் செய்யுங்கள். 5 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும். இது வேகமக முடி வளர்ச்சியை தூண்டும்.

தேங்காய் பால் மற்றும் திராட்சை விதை எண்ணெய் :

அரைக் கப் தேங்காய் பாலில் 1 ஸ்பூன் திராட்சை விதை எண்ணெய் மற்றும் 10 துளி தேயிலை மர எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கவும்.
உங்கள் தலைமுடியை ஷவர் கேப்பால் மூடிடுங்கள். அரை மணி நேரம் கழித்து தலை முடியை அல்சவும். வேகமாக முடி வளர இது சிறந்த வழி.

ஆலிவ் எண்ணெய் மற்றும் இஞ்சி சாறுடன் :

ஒரு கப் ஆலிவ் எண்ணெய் எடுத்து அதில் 5 துளி தேயிலை மர எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் இஞ்சி சாறு ஆகிய்வற்றை கலந்து மிதமாக சூடுபடுத்துங்கள். இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் கழித்து குளிக்கவும்.

 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!