இந்த ஆறு உணவுகள் நம் உடலில் ஏற்படும் வலிகளுக்கு நிவாரணியாக செயல்படுகிறது…

 
Published : Jun 14, 2017, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
இந்த ஆறு உணவுகள் நம் உடலில் ஏற்படும் வலிகளுக்கு நிவாரணியாக செயல்படுகிறது…

சுருக்கம்

these six foods are give strength

 

நம் உடலில் ஏற்படும் வலிகளுக்கு சமையலறையில் உள்ள ஒருசில உணவுப் பொருட்களே சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.

வலி நிவாரணியாக செயல்படும் சிறப்பான ஆறு உணவுகள்

இஞ்சி

ஆயுர்வேத மருத்துவத்தின் படி, இஞ்சியை உணவில் சேர்த்து வந்தால், தசை மற்றும் மூட்டு வலிகளை சரிசெய்யலாம். மேலும் ஆய்வு ஒன்றிலும் இஞ்சி, மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஓட்ஸ்

ஓட்ஸில் மக்னீசியம் அதிகம் உள்ளதால், இதனை பெண்கள் உட்கொண்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று பிடிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். மேலும் ஓட்ஸில் ஜிங்க் இருப்பதால், மாதவிடாய் சுழற்சியின் போது வயிற்று வலி ஏற்படாமல் இருக்க பெண்கள் இதனை சாப்பிடுவது நல்லது.

திராட்சை

ஒரு கப் திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்களானது முதுகுப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வலியைக் குறைக்கும்.

செர்ரி

ஆராய்ச்சி ஒன்றில் இந்த சிறிய செர்ரிப் பழங்களானது பாதிக்கப்பட்ட தசைகளை சரிசெய்ய உதவுவதாக தெரிய வந்துள்ளது. எனவே உடற்பயிற்சி செய்து முடித்த பின், ஒரு டம்ளர் செர்ரி பழ ஜூஸ் அல்லது ஒரு பௌல் செர்ரிப் பழங்களை சாப்பிட்டால், உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் கடுமையான தசை வலியில் இருந்து விடுபடலாம்.

பூண்டு

அக்காலத்தில் இருந்தே பூண்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் பூண்டினை தட்டி ஆலிவ் ஆயிலில் போட்டு சூடேற்றி, அந்த எண்ணெய் கொண்டு மூட்டுகளுக்கு மசாஜ் செய்து வந்தால், மூட்டு வலிகள் பறந்தோடும்.

கிராம்பு

பல் வலிகளுக்கு கிராம்பு சிறந்த நிவாரணியாகும். மேலும் கிராம்பை பல் வலியின் போது வாயில் போட்டு கடித்துக் கொண்டால், பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது
Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க