இந்த உணவுகளை எல்லாம் தவிர்க்காமல் சாப்பிட்டால் ஆண்களுக்கு ரொம்ப நல்லது…

 
Published : Sep 22, 2017, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
இந்த உணவுகளை எல்லாம் தவிர்க்காமல் சாப்பிட்டால் ஆண்களுக்கு ரொம்ப நல்லது…

சுருக்கம்

These foods are very good for men if you eat it all the way.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது, விந்தின் வடிவத்துக்கும் இயக்கத்துக்கும் உதவக்கூடியது. தினமும் 75 கிராம் அல்லது ஒரு கைப்பிடி பாதாம் பருப்பு சாப்பிடுவது விந்தணுவை பலம்பெறச் செய்யும். ஊட்டச்சத்து நிறைந்தது பாதாம் பருப்பு. மாலை வேளை ஸ்நாக்ஸுக்கு உகந்தது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கச் செய்யும். பாதாம் பருப்பைப் போலவே, மீன், ஆளி விதை எண்ணெய், பசலைக்கீரை ஆகியவையும் இந்தச் சத்துகளைக் கொண்டிருப்பவை. இவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பூசணி விதை

துத்தநாகம் (Zinc) என்ற தாதுப்பொருள் ஆண்களின் விந்தணுக்களின் சீரான வளர்ச்சிக்கும் தரத்துக்கும், டெஸ்டோஸ்டீரானின் உற்பத்திக்கும் உதவுபவை. பூசணி விதையில் இந்தச் சத்து அதிகம் உண்டு. பூசணி விதைகளைத் தூக்கி எறிந்துவிடாமல், சாலட், ஸ்மூத்தீஸில் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்களின் பலம் கூடும். ஆனால், பூசணி விதைகளை அதிகமாகச் சாப்பிடுவது விந்தில் பாதிப்பையும் உண்டாக்கலாம். இதை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இறால், கிட்னி பீன்ஸ், பச்சைப்பட்டாணி ஆகியவற்றையும் சாப்பிடலாம்.

தக்காளி

பொதுவாகவே, விந்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் விந்தணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் மோசமான ஃப்ரீ ராடிக்கல்ஸிடம் (Free Radicals) இருந்து பாதுகாப்பவை. இந்த இயற்கையான பாதுகாப்பு சீர்குலையும்போது, விந்தணுவில் பாதிப்பு ஏற்படும். அதனால், ஆண்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, லைக்கோபின் (Lycopene) விந்தணுவின் இயக்கத்துக்கும் வடிவத்துக்கும் உதவுவது. தக்காளி…

அது பச்சையாக இருந்தாலும் சரி, சமைத்ததாக இருந்தாலும் சரி… லைக்கோபின் நிறைந்தது. தினசரி உணவில் தக்காளி சேர்த்துக்கொள்வது, ஆண் தன்மைக்கு உரமூட்டும். தக்காளியைப்போலவே திராட்சை, தர்பூசணி, சிவப்பு கொய்யா, தண்ணீர்விட்டான் கிழங்கு, பப்ளிமாஸ், சிவப்பு முட்டைக்கோஸ், துளசி ஆகியவையும் லைக்கோபின் சத்து நிறைந்தவை. இவற்றையும் சாப்பிடலாம்.

பூண்டு

பூண்டு சாதாரணமானதில்லை. இதில் முக்கியமாக இரண்டு கூறுகள் உள்ளன. இதில் இருக்கும் அலிசின் (Allicin) ரத்த ஓட்டத்தை அதிகரித்து பாலியல் ஹார்மோன்களைத் தூண்டக்கூடியது; இது விந்தணுவுக்கு எந்த பாதிப்பும் வராமல் காக்கும். இதில் இருக்கும் செலினியம் (Selenium) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், விந்தணுவின் சீரான இயக்கத்துக்கு உதவுவது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களைச் சாப்பிடுவது விந்தணுவின் ஆரோக்கியத்துக்கு உதவும். பூண்டைப் போலவே காளான், சிவப்பரிசி, கோழி இறைச்சி, நெத்திலி மீன் இவற்றிலும் இந்தச் சத்து உண்டு.

அவகேடோ

அவகேடோவில் இருக்கும் வைட்டமின் இ, விந்தணுவின் இயக்கம் சிறப்பாக நடைபெற உதவக்கூடியது. வாரத்துக்கு ஒருமுறையாவது அவகேடோ சாப்பிடுவது ஆண்களுக்கு அழகோடு, ஆரோக்கியத்துக்கும் உதவும்.

கேரட்

விந்தணுவின் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றுவதில் கேரட்டுக்கு தனி இடம் உண்டு. காலையில் டிபனுக்கு முன்னதாக ஒரு கேரட்டை எடுத்துக் கடித்துச் சுவைப்பது ஆண்களுக்கு அவ்வளவு நல்லது. இதில் இருக்கும் எல்-கார்னிடைன் (L-Carnitine) எனும் அமினோ அமிலம், நம் வளர்சிதை மாற்றத்துக்கும், விந்தணுவின் இயக்கத்துக்கும் நன்மை செய்யக்கூடியது. இதை வாரத்துக்கு மூன்று முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது குழந்தைப்பேறுக்கும், ஆண் மலட்டுத்தன்மை போக்கவும் உதவும். இதைப் போலவே முட்டைக்கோஸ், சிவப்பு முள்ளங்கி, கடுகு ஆகியவையும் ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்க உதவும்.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க