ஒற்றைத் தலைவலியை குணமாக்க சில எளிய அற்புதமான டிப்ஸ்…

First Published Sep 22, 2017, 1:30 PM IST
Highlights
Some simple tips to cure single headache ...


இஞ்சி

ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படும் இஞ்சி, தலைவலியைக் குணப்படுத்தும் தன்மையுடையது. நாள்பட்ட வீக்கம், வலி போன்றவற்றால் ஏற்படும் தலைவலியைப் போக்கும் ஆன்டி-இன்ஃப்ளாமேட்டரியை (Anti-inflammatory) கொண்டுள்ளது. எனவே, தலைவலிக்கும்போது, இஞ்சி ரமேஷ்டீயாக தயார் செய்து குடிக்கலாம். சாப்பிடும் உணவில் சிறிது இஞ்சியைச் சேர்த்து சாப்பிட்டால், தலைவலியைக் குறைக்கலாம்.

ஆளி விதை

உடலில் தொற்றுநோய் அல்லது காயங்களால் ஏற்படும் கட்டிகள், வீக்கம் போன்றவையும் ஒற்றைத்தலைவலி ஏற்பட காரணமாக உள்ளன. இது போன்ற பிரச்னைகளால் ஏற்படும் ஒற்றைத்தலைவலிக்கு ஆளி விதை மிகச் சிறந்த நிவாரணம் தரும். இதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் (Omega-3 fatty acid) இதற்கு துணைபுரிகின்றன. இந்த விதை உணவை எண்ணெயாகவோ அல்லது உணவில் சேர்த்தோ சாப்பிடலாம்.

மீன்

மீன் உணவுகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள் நிறைவாக உள்ளன. இவற்றைச் சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா-3, ஒற்றைத்தலைவலியைக் குணப்படுத்தும்.

கீரைகள்

கீரைகளில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இவை ஒற்றைத்தலைவலியை குணப்படுத்தும் தன்மையுடையது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மாதாவிடாய் காலத்தில் ஏற்படும் இந்தத் தலைவலிக்கு மிகச்சிறந்த நிவாரணி கீரை உணவுகள்.

தேன்

தேனில் பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை நிறைவாக உள்ளன. இவை, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே, தூங்கச் செல்வதற்கு முன்னதாகவோ, உணவு உண்பதுக்கு முன்னதாகவோ இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சாப்பிடுவது இந்தத் தலைவலியைக் குறைக்க உதவும். அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் தேனுடன் கால் டீஸ்பூன் லவங்கப்பட்டையை தண்ணீரில் கலந்து பருகலாம்.

துளசி எண்ணெய்

தசைகள் இறுக்கம் மற்றும் டென்ஷனால் உண்டாகும் ஒற்றைத்தலைவலியிலிருந்து விடுபட, துளசி எண்ணெய் மிகச் சிறந்த நிவாரணி, இதைத் தலையில் சூடு பறக்கத் தேய்த்தால் வலி குறையும்.

ஆவி பிடித்தல்

சூடான தண்ணீரில், லாவெண்டர் எண்ணெயை இரண்டு துளிகள் சேர்த்து ஆவி பிடித்தால் தலைவலி குறையும். இந்த எண்ணெயை தலையிலும் தேய்த்துக்கொள்ளலாம். ஆனால் உட்கொள்ளக்கூடாது. அதேபோல, மஞ்சள் 1 டீஸ்பூன், கல்லுப்பு 1 டீஸ்பூன், நொச்சியிலை 1 கைப்பிடி ஆகியவற்றை நீரில் வேகவைத்து ஆவி பிடித்தாலும் தலைவலி தீரும்.

click me!