அன்றாட வாழ்வில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்களுக்கு ஆபத்தானது…

First Published Jan 12, 2017, 2:29 PM IST
Highlights

நம் வாழ்க்கையில் ஒரு அங்கம் என கருதி அன்றாடம் நாம் சில காரியங்களில் ஈடுபட்டு வருவோம். ஆனால் அவ்வகையான செயல்கள் உங்களுக்கு மிகவும் ஆபத்தாய் போய் முடியலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

உதாரணத்திற்கு, சாதாரண ஒரு தும்மல் தீவிர முதுகு வலியை ஏற்படுத்தலாம். வாதத்தை கூட ஏற்படுத்தலாம்.

இது மட்டுமல்ல! உங்களுக்கு ஆபத்தை விழைவிக்க கூடிய அன்றாட செயல்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

1.. ரப்பர் செருப்புகள் அணிவது

வெப்பமான கோடைக்காலத்தில் சாதாரண ரப்பர் காலணிகளை அணிவதை விட உங்கள் பாதங்களுக்கு வேறு சொர்க்கம் இருக்க முடியுமா? ஆனால் அவ்வகையான ரப்பர் செருப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில விசயம் உண்டு.

பாதங்களில் ஏற்படும் தசைநாண் அழற்சி. மலிவான விலை கொண்ட செருப்பு உங்களது இயல்பு நடையை மாற்றிவிடும். மேலும் முக்கிய இடுப்பு மற்றும் முழங்கால் பிரச்சனைகள் ஏற்படும்.

அதனால் வளைவு போன்ற ஆதரவு மற்றும் இறுக்கமான ஸ்ட்ராப் உள்ளனவா என்பதை பார்த்து வாங்குங்கள்.

2.. பர்ஸில் அளவுக்கு அதிகமான பொருட்களை திணித்தல்

அனைத்தையும் பர்ஸிற்குள் திணித்து வைக்கும் பழக்கத்தை பலரும் காலம் காலமாக பின்பற்றி வருவார்கள். அனைத்து ரசீதுகள், ரொக்கம் மற்றும் கையில் கிடைக்கும் அனைத்தையும் பர்சில் அடைக்கும் போது உங்களுக்கு பின்புறம் மற்றும் கழுத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.

இதனை இயற்கை மீறிய நரம்புக் கோளாறு (ந்யூரோபதி) என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாள் முழுவதும் எடை அதிகமுள்ள பர்ஸின் மீது உட்கார்ந்து வந்தால், உங்கள் முதுகு தண்டு பாதிப்படையும். மேலும் பின்புறத்தில் உள்ள இடுப்புமூட்டுக்குரிய நரம்புகள் குத்தப்படும்.

அதனால் பர்ஸை எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் பின்பக்க பாக்கெட்டில் மட்டும் வேண்டாம்.

3.. இறுக்கமான ஜீன்ஸ் அணிதல்

கூடுதல் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் தொடைக்கு மேலே உள்ள நரம்புகள் இறுக்கமடையும். இதன் விளைவாக, கால்களுக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் தடைப்படும்.

இதனால் மேரல்கியா பரெஸ்தெட்டிக்கா என்ற பிரச்சனை ஏற்படும். உங்கள் பாதங்கள் மரத்து போய் விடும். மேலும் வெளிப்புற தொடை பகுதிகளில் எரிச்சல் ஏற்படும்.

4.. கடினமான உடற்பயிற்சியை அதிகம் செய்தல்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. பல நேரங்களில், குறுகிய காலத்தில் தசைகளுக்கு பலத்தை சேர்க்க சிலர் தசைகளுக்கு அதிக உடற்பயிற்சியை செய்வார்கள். ஆனால் நடப்பது என்னவென்றால், தசைகளுக்கு அளவுக்கு அதிகமாக வேலை கொடுத்தால், திசு உடைவு ஏற்படும். இதனால் இரத்தத்திற்குள் புரதம் கசியத் தொடங்கி விடும்.

எனவே இடைவேளை எடுத்துக் கொண்டு, போதிய ஓய்வையும் எடுத்துக் கொண்டு, தசைகள் சரியான வடிவத்தை பெற போதிய கால நேரத்தை வழங்கி உடற்பயிற்சியை செய்யவும்.

5.. அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தல்

எந்தளவிற்கு தண்ணீர் குடிக்கிறோமோ அந்தளவிற்கு உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும் என சொல்லியே நாம் வளர்க்கப்பட்டிருப்போம். இருப்பினும், அளவுக்கு அதிகமான தண்ணீர் உடலில் உள்ள மற்ற முக்கிய பொருட்களான இரும்பு, சோடியம் மற்றும் இதர கனிமங்களை நீர்த்துப்போக செய்யும்.

இதனால் ஹைபோடாட்ரிமியா எனப்படும் நிலை ஏற்பட்டு, அதனால் தலைவலி, வாந்தி போன்றவைகள் உண்டாகும். தண்ணீர் நிறைய குடியுங்கள், ஆனால் அளவுக்கு அதிகமாக வேண்டாம்!

click me!