
நீரிழிவு நோயாளிகளுக்கு வரக்கூடிய நரம்பு தொடர்பான பிரச்னையே டயாபடீக் நியூரோபதி.
நாள்பட்ட நீரிழிவு தொடரும் போது நரம்பு இழைகள் மற்றும் ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுகின்றன.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது அது நரம்புகளின் தகவல் பரிமாற்ற வேலையை பாதிக்கிறது.
மேலும் ரத்தத்திலிருக்கும் அதிகபடியான சர்க்கரையானது மிக நுண்ணிய ரத்தக் குழாய் சுவர்களையும் பாதிப்படையச் செய்கிறது.
இதனால் ரத்தக் குழாய்களால் நரம்புகளுக்குப் போதுமான அளவு பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
நீரிழிவு உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இப்பாதிப்பு வரலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்கள் இல்லாததே இது போன்ற பிரச்னைகளுக்கு காரணம். இதை கட்டுக்கள் வைப்பதன் மூலம் இப்பாதிப்புகளிலிருந்து தப்பலாம்.
டயாபடீக் நியூரோபதி பிரச்னையால் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி உடலில் தங்கும் நச்சுக்களால் நரம்புகள் பெரிதும் பாதிப்படைகிறது.
பெரிஃபெரல் நியூரோபதி, ஆடாடானமிக் நியூரோபதி, பராக்ஸிமல் நியூரோபதி, போகல் நியூரோபதி என நான்கு வகைகள் இதில் உள்ளன.
கால் மரத்துப் போகும், கால் பாதங்களில் ஊசி குத்தும் உணர்வு,பாதம் மென்மையான பொருள் மீது நடப்பது போல் இருக்கும்,காலில் ஏதாவது பொருட்கள் குத்தினால் கூட உணர்வு இருக்காது,வலிக்காது, நோய்த் தொற்று ஏற்பட்டு காலில் புண் வரும். நரம்புகள் பாதிக்கப்படுவதால் ரத்ததில் சர்க்கரையின் அளவு குறைந்தால் கூட இவர்களால் கண்டறிய முடியாது.
இப்பாதிப்பை வராமல் தடுப்பதை தள்ளிப் போடலாமே தவிர தடுக்க வழியில்லை. மது பகை பழக்கத்தை கைவிடுவது, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதான் இதற்கு தீர்வு.
வௌ்ளை நிற உணவுகளான அரிசி, மைதா, சர்க்கரை இவற்றை தவிர்க்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடாதவாறு அன்றாட உணவை சமச்சீராக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எல்லாச் சத்துக்களும் அடங்கிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு அட்டவணையை பின்பற்ற வேண்டும். இதோடு தினமும் உடற்பயிற்சி அவசியம்.
டயாபடீக் நீயூரோபதி வந்துவிட்டால் தீர்வு இல்லை. டயாபடீக் நியூரோபதி மிகவும் ஆபத்தானது.