பன்னிரெண்டு விதமான நோய்களும், அவற்றை குணமாக்கும் 12 விதமான காய்கறிகளும் இங்கே காணலாம்...

 
Published : Jun 12, 2018, 02:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
பன்னிரெண்டு விதமான நோய்களும், அவற்றை குணமாக்கும் 12 விதமான காய்கறிகளும் இங்கே காணலாம்...

சுருக்கம்

There are twelve kinds of diseases and 12 varieties of veggies that can be found here.

 
கத்தரிக்காய்

ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் கோலினள் அதிகமாக உள்ள காய்களில் ஒன்று கத்தரிக்காய். இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தாது உப்புகள் நிறைந்தது கத்தரி. உடல் இயக்கத்தையும் சிறுநீரக செயல்பாட்டையும் சீராக்கும். வாய்ப்புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது.

புடலங்காய்

புடலங்காயில் நீர்ச்சத்து மிக அதிகம். இதில் போதிய அளவு நார்ச்சத்தும் ஃபோலிக் அமிலமும் கொண்ட குறைந்த கலோரி அளவுள்ள காய்களுள் ஒன்று புடலங்காய். சர்க்கரை, இதய நோய்கள், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.

வெண்டைக்காய்

வெண்டைக்காயில் மிக அதிக அளவில் ஃபோலிக் அமிலமும் பொட்டாசியமும் வைட்டமின் சியும் உள்ளதுத. மேலும் அதில் புரதம், இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் ஆகியவை இருப்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

பூசணி

சிறுநீர் உபாதைகளுக்கு நல்லது தீர்வு தரவல்லது பூசணி. இது, மலச்சிக்கல், தலைபாரம், சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றுக்கு நல்ல பலனளிக்கும்.

அரசாணிக் காய் 

நிணநீர் பிரச்சனைகளுக்கு பயன் தரவல்லது அரசாணிக்காய். ஒவ்வாமை, வாந்தி, பேதி, பித்தப்பை கல் போன்றவைக்கு அரசாணிக் காய் சாப்பிடுவதால் நல்ல தீர்வு காண முடியும்.

இதுபோன்று பின்வரும் 12 காய்களும் 12 விதமான நோய்களுக்கு தீர்வாகும்…

1.. சிறுநீரகக் கோளாறு – கத்தரிக்காய்

2.. பக்கவாதம் – கொத்தவரங்காய்

3.. இன்சோம்னியா – புடலங்காய்

4.. ஹெர்னியா – அரசாணிக்காய்

5.. கொலஸ்ட்ரால் – கோவைக்காய்

6.. ஆஸ்துமா – முருங்கைக்காய்

7.. நீரிழிவு – பீர்க்கங்காய்

8.. மூட்டுவலி – தேங்காய்

9.. தைராய்டு – எலுமிச்சை

10.. உயர் ரத்த அழுத்தம் – வெண்டைக்காய்

11.. இதயக்கோளாறுகள் – வாழைக்காய்

12.. புற்றுநோய் – வெண்பூசணிக்காய்

இதுபோன்று இந்த 12 காய்கறிகளிலும் வைட்மின்களும் மினரல்களும் புரதச்சத்தும் நிறைந்திருக்கின்றன. இவை அனைத்துமே குறைந்த கலோரிகள் கொண்ட காய்கறிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Weight Loss Foods : ஈஸியா எடையை குறைக்கும் '7' ஆரோக்கியமான உணவுகள்!! லிஸ்ட் இதோ!!
Red Banana : வெறும் வயிற்றில் 'செவ்வாழை' சாப்பிடுவது நல்லதா? அவசியம் 'இதை' தெரிஞ்சுக்கோங்க