மலிவாகக் கிடைக்கும் கொய்யாப்பழத்தில் இவ்வளவு சத்துகள் குவிந்திருக்கின்றன...

 
Published : Dec 26, 2017, 01:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
மலிவாகக் கிடைக்கும் கொய்யாப்பழத்தில் இவ்வளவு சத்துகள் குவிந்திருக்கின்றன...

சுருக்கம்

There are so many nutrients in the cheap guava ...

கொய்யாப்பழத்தில் பல்வேறு சத்துகள் குவிந்திருக்கின்றன. இதில் வைட்டமின்-பி, சி ஆகிய உயிர்ச்சத்துகள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.

மற்ற பழங்களை ஒப்பிடும்போது கொய்யாவில் வைட்டமின்-சி அதிகம் உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு இப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.

மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், அப்பிரச்சனையில் இருந்து மீளலாம்.

கொய்யாப் பழத்தை நறுக்கிச் சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள, ஈறுகள் வலுவடையும்.

இந்தப் பழம் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும்.

ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கொய்யாவை உட்கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கொய்யாப் பழத்தில் உள்ள லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள், புற்றுநோய்க் கட்டிகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டவை.

கொய்யாப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக் கொள்ளலாம்.

கொய்யாப் பழத்தை தோல் நீக்கிச் சாப்பிடுவதை விட, தோலுடன் அப்படியே சாப்பிடுவது நல்லது. இது முகத்துக்குப் பொலிவைத் தருவதுடன், தோல் வறட்சியையும் நீக்கும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க