இளநீர் குடித்தால் ரத்தம் சுத்தமடையும். இளநீரின் இன்னும் நிறைய பயன்கள் உள்ளே...

Asianet News Tamil  
Published : Dec 26, 2017, 01:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
இளநீர் குடித்தால் ரத்தம் சுத்தமடையும். இளநீரின் இன்னும் நிறைய பயன்கள் உள்ளே...

சுருக்கம்

If you drink your tender the blood clears. Many of the benefits of juice are inside ..

** இளநீர் குடித்தால் ரத்தம் சுத்தமடைவதொடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.

** பெண்களின் மாதவிலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் சிறந்த மருந்து. 

** பேதி, சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.

** சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர்தான்.

** டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கபடும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

** அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகிப்பதால் அறுவைச் சிகிச்சைப்புன் விரைவில் குணமடையும்.

** இவ்வளவு நன்மைகளை மனிதனுக்கு வழங்கும் இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதைத் தவிக்க வேண்டும். ஏனெனில், தூங்கி எழுந்தவுடன் வயிறு சற்று சூடாக இருப்பதால், இளநீரில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்களை உருவாக்கும். ஏதாவது உணவு சாப்பிட்ட பின்னரே இளநீரைப் பருக வேண்டும். அல்லது உணவு இடைவேளையில் தான் இளநீர் பருக வேண்டும். 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake