தேங்காய் மற்றும் கறிவேப்பிலையை  சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஒரு அலசல்...

 
Published : Nov 23, 2017, 02:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
தேங்காய் மற்றும் கறிவேப்பிலையை  சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஒரு அலசல்...

சுருக்கம்

The benefits we get by eating coconut and curry leaves are a good deal ...

தேங்காய்:

தேங்காய் நல்லதா? கெட்டதா? என்பதில் பலருக்கும் பலவிதக் கருத்துகளும் கேள்விகளும் உண்டு. 

கேரளா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தேங்காய் இல்லாமல் சமையல் ருசிப்பதே இல்லை. 

சாம்பாரோ, ரசமோ, கூட்டோ, பொரியலோ, வேறு எந்த உணவோ? அதில் பிரதானமாக இடம் பெறுவது தேங்காய். அவர்களுடன் ஒப்பிடும்போது, நம்மூரில் தேங்காயின் உபயோகம் சற்று குறைவுதான். 

தினசரி 30 முதல் 40 கிராம் தேங்காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்சனையில்லை. 

துருவி, பால் எடுத்துக் கொதிக்க வைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக்கிறது.

சமைக்காத தேங்காயானது எல்லோருக்குமே நல்லதுதான். 

தேங்காய்க்கு வயிற்றுப்புண்களையும் நீர்க்கோவையை நீக்கும் சக்தி உண்டு. 

அல்சர் நோயாளிகளுக்கும் தேங்காய் பால் சிறந்தது.

கறிவேப்பிலை:

மணமூட்டி உணவு விருப்பை உண்டாக்கும். 

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. 

சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகால் வலி கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். 

கண் பார்வை தெளிவடையும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் பத்து கறிவேப்பிலையையு‌ம், மாலையில் பத்து இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க