வெங்காயம் மற்றும் பெருங்காயத்தில் இவ்வளவு சக்திகள் இருக்குனு தெரியுமா?

First Published Nov 23, 2017, 2:37 PM IST
Highlights
Do you know that there are so many forces in onions and almonds?


வெங்காயம்:

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள ”அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய். 

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. 

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும் சக்தி கொண்டது வெங்காயம்.

வெங்காயம் இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். 

வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும் வலி குறைந்துவிடும்.

பெருங்காயம்: 

சமையலில் ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும். இதை, "கடவுளர்களின் மருந்து" என்று குறிப்பிடுகிறார்கள்.

காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம் சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. 

எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.

வாயுக்கோளாறை விரைவிலேயே சரி செய்யும் மருந்து இது. 

தசைகளுக்கு பலம் கொடுக்கும், சீறுநீரின் அளவைப் பெருக்கும்.

நாள்தோறும், பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி வெளியேற்றும், வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. 

மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

click me!