உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...

First Published Nov 22, 2017, 1:38 PM IST
Highlights
Do you know Ten pepper can be eaten at home ...


அனைத்து வீடுகளின் அஞ்சறைப் பெட்டியிலும் அவசியம் இருக்க வேண்டியவை மிளகும், சீரகமும்.  சாதாரண சமையலில் கூட இவை இரண்டும் சேரும்போது, அதன் ருசியும் மணமும் பன்மடங்கு கூடுவதை உணரலாம்.

மிளகு

‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்று மிளகுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறது ஒரு பழமொழி.

மிளகு மிகச்சிறந்த ஆன்ட்டிபயாடிக்.  

மிளகு வீக்கத்தைக் குறைக்கும். 

வாய்ப்புண்களையும் ஆற்றும். 

தொண்டைக் கட்டை தொலைக்கும். 

நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அவதிப்படுவோருக்கும் மிளகு அருமையான மருந்து. 

நாள்பட்ட இருமல், அதனால் ஏற்படும் தொண்டை வலிக்கும் மிளகு மருந்தாகும்.

அதிக அளவு வியர்வையைத் தந்து, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டது. 

அம்மை வந்தவர்களுக்கு சமையலில் மிளகுதான் பிரதானமாகச் சேர்க்கப்படும். 

தொண்டைக் கட்டை தொலைக்கும்.

சீரகம்:

எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப் போகுமே... விடாவிடில் நான் தேரனும் அல்லவே’ என்று சீரகத்தின் புகழ் பாடுகிறது சித்தர் பாடலொன்று. அத்தகைய சிறப்புடையவை மிளகும் சீரகமும்.

சீர் + அகம் = சீரகம். அதாவது, உடலின் உள் உறுப்புகளை சீராக்கக் கூடியது. மிளகு இருக்கும் இடத்தில் சீரகமும் கட்டாயம் இடம்பெறும்.

சீரகத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே, அது பூஞ்சைத் தொற்றுக்கு எதிராகவும் போராடக்கூடியது. 

சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இருக்க உதவுகிறது.

சீரகம் ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. 

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை சரியான நிலையில் வைக்கக் கூடியது. 

வயிற்றுச் சூட்டைத்தணிக்கும்.

சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர், சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை அதிகரிக்கும்.

click me!