தாமிர பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் உங்களுக்கு கிடைக்கும் பத்து அதிஅற்புத நன்மைகள்...

 
Published : Nov 15, 2017, 01:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
தாமிர பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் உங்களுக்கு கிடைக்கும் பத்து அதிஅற்புத நன்மைகள்...

சுருக்கம்

Ten advantages are available to you for drinking water in the cupboard.

1.. தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும்

தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

2.. கீல்வாத வலியை குணப்படுத்தும்

தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

3.. புண்களை வேகமாக குணப்படுத்தும்

புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.

4.. மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்

மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

5.. செரிமானத்தை மேம்படுத்தும்

வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.

6.. இரத்த சோகையை எதிர்க்கும்

நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

7.. கர்ப்ப காலத்தின் போது:

கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

8.. புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும்

தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

9.. வயதாகும் செயல்முறை குறையும்

தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

10..   ஈ-கோலி பாக்டீரியாவை எதிர்க்கும்

வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும்.  

PREV
click me!

Recommended Stories

Kidney Stone Symptoms : உங்க கிட்னில கல்லு இருக்குனு காட்டுற '4' அறிகுறிகள் இவைதான்; இதை அலட்சியம் பண்ணாதீங்க!
Winter Hair Fall : வெந்தயத்தை இப்படியும் யூஸ் பண்ணலாமா? குளிர்கால முடி உதிர்வைத் தடுக்க சூப்பர் வழி